• Jul 24 2025

“இப்போதும் வாடகை வீட்டில் தான் இருக்கிறேன்” - பிக்போஸ் கவினின் கருத்தால் ஆச்சர்யத்தில் ரசிகர்கள்

Jo / 2 years ago

Advertisement

Listen News!

தொலைக்காட்சி தொடரில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் கவின். குறிப்பாக சரவணன் மீனாட்சி சீரியலில் கவின் நடித்த வேட்டையன் கதாபாத்திரம் மிகவும் பேமஸ் ஆனது. இதையடுத்து தொகுப்பாளராக ஒன்றிரண்டு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி உள்ள கவின், பின்னர் சினிமாவில் ஹீரோவாக நடிக்கத் தொடங்கினார். 

அந்த வகையில் கவின் முதன்முதலாக ஹீரோவாக நடித்த திரைப்படம் நட்புன்னா என்னனு தெரியுமா. இப்படம் பெரியளவில் வெற்றியடையவில்லை.

இதையடுத்து அவர் நடித்த டாடா திரைப்படம் அண்மனையில் திரையரங்குகளில் ரிலீசாகி அமோக வரவேற்பை பெற்று வருவதோடு வசூலையும் வாரிக் குவித்துள்ளது. டாடா படத்தின் வெற்றிக்கு பின் கவின் அடுத்தடுத்து படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் தான் ஹீரோ ஆன பின்பும் மிடில் கிளாஸ் வாழ்க்கையே வாழ்ந்து வருவதாக கவின் கூறியுள்ளது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. அதேபோல் இன்று வரை தான் வாடகை வீட்டில் தான் வசித்து வருவதாகவும் கவின் அந்த பேட்டியில் கூறி இருக்கிறார். லயோலா காலேஜில் படித்தாலும் அரியர் கிளியர் செய்ய முடியாததால் இன்றுவரை டிகிரி வாங்கவில்லை என்ற தகவலையும் அந்த பேட்டியில் கவின் பகிர்ந்துகொண்டார்.

அதேபோல் கோடிகளை குறிவைக்கும் கவின் என செய்திகள் உலா வந்தது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு “நானும் அந்த செய்தியை படித்தேன். நல்லா இருந்துச்சு, அது நடந்தா இன்னும் நல்லா இருக்கும்” என கூலாக பதிலளித்தார் கவின். 

அவரின் இந்த பேட்டி தற்போது யூடியூப்பில் செம்ம வைரல் ஆகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




Advertisement

Advertisement