• Sep 09 2025

நயன்தாரா குழந்தைகளுக்கு நான் தான் தாய்மாமா- அவங்க என்னை அப்பிடித்தான் கூப்பிடுவாங்க- ஓபனாகப் பேசிய சந்தானம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் தான் காமெடி நடிகர் சந்தானம். இதையடுத்து சில நகைச்சுவை ரோலில் நடித்து வந்த இவர், முன்னணி காமெடி நடிகராக இருந்த வடிவேலு, விவேக்கிற்கு அடுத்த இடத்தினை பிடித்தார்.

தமிழ் சினிமாவில் தனக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் சந்தானம் தற்போது ஹீரோவாக பல படங்களில் நடித்து வருகிறார்.அந்த வகையில் இயக்குநர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிடி ரிட்டன்ஸ் படம் நேற்றைய தினம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல விமர்சனங்களைப் பெற்று வருகின்றது.


இந்த நிலையில் இப்படத்தின் ப்ரமோஷனுக்காக கலந்து கொண்ட சந்தானம் பல விஷயங்கள் குறித்து பேசியுள்ளார். அதில் குறிப்பாக நடிகை நயன்தாரா குறித்து பேசியுள்ளார். அதாவது நயன்தாராவை எனக்கு வல்லவன் படத்தில் இருந்து தான் தெரியும். அதுக்கு பிறகு தான் நிறைய படங்களில் சேர்ந்து நடிச்சோம். அவங்க என்னை அண்ணா என்று தான் சொல்லுவாங்க நான் தங்கச்சி என்று சொல்லுவேன்.


இப்போ குழந்தை பிறந்த டைம்ல அவங்க வீட்டுக்க போனேன் விருந்து எல்லாம் வச்சாங்க, குழந்தைகள் கிட்ட மாமா வந்திருக்காரு என்று சொன்னாங்க நான் கேட்டேன் ஏன்மா காது குத்து பங்சன் வந்தால் என் மடில வைச்சு தான் காது குத்துவியாம்மா என்று எல்லாம் நக்கலாப் பேசியிருந்தேன். அப்படி நடந்தால் தாய்மாமன் சீர் செய்வேன் எனப் பேசியுள்ளார்.திரும்பவும் நாங்க எல்லோரும் சேர்ந்து நடிக்கிற மாதிரி வாய்ப்புக்கிடைத்தால் கட்டாயம் சேர்ந்து நடிப்போம் என்றும் தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement