• Jul 23 2025

கெட்ட வார்த்தை பேச சொன்னதே நான் தான்- லியோ ட்ரெய்லர் சர்ச்சைக்கு பதிலடி கொடுத்த லோகேஷ் கனகராஜ்

stella / 1 year ago

Advertisement

Listen News!


நடிகர் விஜய், த்ரிஷா 14 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்துள்ள படம் லியோ. படத்தில் இவர்களுடன் கௌதம் மேனன், மிஷ்கின், அர்ஜூன், சஞ்சய் தத், அனுராக் காஷ்யப் உள்ளிட்டவர்களும் நடித்துள்ளனர்.

 இந்தப் படத்தின் சென்சார் உள்ளிட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நிறைவடைந்த நிலையில் படம் வரும் 19ம் தேதி சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ளது. படத்தின் ட்ரெயிலர், பாடல்கள், வீடியோக்கள், கிளிம்ப்ஸ் போன்றவை அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.


விஜய்யின் கேரியரில் மிகவும் அதிகமான எதிர்பார்ப்புகளுடன் ரிலீசாகவுள்ள லியோ படத்தின் ப்ரீ புக்கிங்குகள் உள்ளிட்டவை ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன. தமிழகத்தில் இந்தப் படத்தின் ப்ரீ புக்கிங்குகள் வரும் 15ம் தேதி முதல் துவங்கவுள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் தெரிவித்திருந்தார்.

 மேலும் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி துபாயில் நடத்தப்பட உள்ளதாகவும் அதில் ரசிகர்களிடையே வீடியோ மூலம் விஜய் பேசவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.மேலும் இப்படத்தின் ட்ரெய்லர்  சில தினங்களுக்கு முன்பு வெளியானது. அதில் விஜய் கெட்ட வார்த்தை பேசியதால் பல எதிர்ப்புக்களும் கிளம்பியுள்ளன.


இந்நிலையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அளித்த ஒரு பேட்டியில் இது பற்றி பேசி இருக்கிறார். விஜய்யை தான் கட்டாயப்படுத்தி தான் அந்த வார்த்தையை பேச வைத்ததாக கூறி இருக்கிறார்.அதனால் இதற்கு நான் தான் முழு பொறுப்பு என்றும் லோகேஷ் குறிப்பிட்டு இருக்கிறார்.  

Advertisement

Advertisement