• Jul 25 2025

வனிதா அக்காவுக்காக தான் வெயிட் பண்றேன்-அசிமால் பதறிய அமுதவாணன்- குழப்பத்தில் இருக்கும் ஹவுஸ்மேட்ஸ்

stella / 2 years ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் வீட்டில் நாமினேஷன் நடந்து முடிந்திருந்த நிலையில், இந்த வாரத்தில் வெளியே இருந்து சில பிரபலங்களும் பிக் பாஸ் வீட்டிற்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர். அந்த வகையில், முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரான சுரேஷ் சக்ரவர்த்தியும் யூ டியூபர் அகமது மீரானும் உள்ளே வருகை தந்திருந்தனர். அவர்கள் போட்டியாளர்கள் விளையாட்டு திறன் பற்றியும், உள்ளே நடக்கும் சுவாரஸ்யமான விஷயங்கள் குறித்தும் தங்களின் கருத்துக்களையும் விமர்சனங்களையும் பகிர்ந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து, இரவு நேரத்தில் அனைத்து போட்டியாளர்களும் அடுத்து உள்ளே யார் வருவார்கள் என்பது பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள் . அப்போது வனிதா வருவதாக சிலர் குறிப்பிட அனைவரும் ஒரு நிமிடம் அரண்டு தான் போகின்றனர். மூன்றாவது பிக் பாஸ் சீசனில் போட்டியாளராக களமிறங்கி இருந்த வனிதா, மிகவும் ஆவேசமாகவும் யாராக இருந்தாலும் துணிச்சலாக நேராக பேசவும் கூடியவர்.


அப்படி இருக்கையில், வனிதா வீட்டிற்கு வருவார் என்பது பற்றி போட்டியாளர்கள் பேசிய வண்ணம் உள்ளனர். அப்போது பேசும் அசிம், "வனிதா அக்கக்காக தான் வெயிட்டிங். அவங்க பேசட்டும். நம்ம சூப்பரா கவுண்டர் குடுக்கலாம் அவங்களுக்கு" என சிரித்துக் கொண்டே தெரிவிக்கிறார். 

இதனைக் கேட்டதும் ஒரு நிமிடம் ஷாக்கான அமுதவாணன், "நம்மளா?. ஏன் நம்மன்னு எங்கள சேர்க்குறே. Open-ஆ சொல்றேன்யா. அந்த அளவுக்கு எங்க நெஞ்சுல தைரியம் இல்லைய்யா. இன்னும் ரெண்டு வாரத்துக்கு அப்புறம் நாங்களே போய்டுவோம்யா" என ஜாலியாக தெரிவிக்க, "இவங்க வனிதா வனிதான்னு சொல்லி அந்தம்மாவ கடைசில இங்க எறக்க போறாங்க" என விக்ரமன் கூறுகிறார். இதனால் மற்றவர்கள் ஜாலியாக சிரிப்பதைக் காணலாம்.


Advertisement

Advertisement