• Jul 25 2025

பிரதீப்பை இந்த ஒரு காரணத்திற்காகத் தான் அடித்தேன்- ஓபனாகப் பேசிய பிக்பாஸ் விஜய் வர்மா

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் முக்கிய தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியில் சீசன் 7 இல் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமானவர் தான் விஜய் வர்மா. இவர் கடந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியிருந்து வெளியேறினார்.

இந்நிலையில் பிக்பாஸில் முதல் ஸ்ட்ரைக் கார்டு வாங்கிய விஜய் வர்மா ஒரு வாரம் புத்தராக இருந்தார். ஆனால் அடுத்து நடந்த ஒரு டாஸ்க்கில் ரெஸ்ட்லிங் ஷார்ட்டை போட்டு பலரையும் பதற வைத்தார். இதையடுத்து அவர் அந்த வாரமே நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டார். 


இதையடுத்து தான் எதுக்கு அப்படி செய்தேன் என ஒரு பேட்டியில் தெரிவித்து இருக்கிறார் . என்னுடைய நோக்கம் அந்த ஆக்சிஜன் சிலிண்டர் எடுக்க வேண்டும் என்பதாக இருந்தது. அதை தவிர மற்றவர்களை தடுக்க நான் நினைக்கவே இல்லை. ஆனால் பிரதீப் என்னை லாக் செய்த போது என்னுடைய கழுத்தை பிடித்தார். 

நிகழ்ச்சிக்கு உள்ளே செல்ல ஒரு நாள் இருக்கும் போது தான் அங்கு எனக்கு ஒரு அறுவை சிகிச்சை நடந்தது.அது பிரதீப்புக்கு தெரியும். என்னால் மூச்சு விட முடியாமல் போனது. அந்த லாக்கில் இருந்து தப்பிக்கவும் என்னை விடுக்கவும் தான் அவரை அப்படி அடிக்கவே நேர்ந்தது எனத் தெரிவித்தார். மற்றொரு பேட்டியில் நான் வெறியேறுவேன் என நினைக்கவில்லை. இன்னொரு வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக சிறப்பாக விளையாடுவேன் என்றார்.


Advertisement

Advertisement