• Jul 24 2025

போன் பண்ணி வாய்ப்புக் கேட்டேன் ஓ குண்டச்சியா என்று கேட்டாரு- வடிவேலுவை பற்றி நடிகை சொன்ன அதிர்ச்சித் தகவல்

stella / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் வடிவேலு நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரீஎன்ட்ரி கொடுத்து மீண்டும் நடித்து வருகின்றார். அந்த வகையில் இவரது நடிப்பில் இறுதியாக வெளியாகிய மாமன்னன் திரைப்படம் ரசிகர்களிடையே பாராட்டைப் பெற்று வருகின்றது. இது ஒருபுறம் இருக்க வடிவேலு அடிக்கடி சர்ச்சகளிலும் சிக்கி வருவதுண்டு.

அதுவும் சமீப காலமாக வடிவேலுவை பற்றி அவருடன் நடித்த சக நடிகர்கள் மாறி மாறி புகார்களை அளித்த வண்ணம் இருக்கிறார்கள்.இந்த நிலையில் முதல் முறையாக ஒரு நடிகை வடிவேலுவை பற்றி வெளிப்படையாக கூறியிருக்கிறார் நடிகை தேவி ஸ்ரீ.


சரத்குமார் நடித்த அரசு என்ற திரைப்படத்தின் மூலம் முதன்முதலாக அறிமுகமான தேவி ஸ்ரீ வடிவேலு விவேக் இருவருடனும் நகைச்சுவை காட்சிகளில் சேர்ந்து நடித்திருக்கிறார். அசுரன் திரைப்படத்தில் கூட முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாகவும் கூறினார்.

ஆனால் வடிவேலுவுடன் இந்திரலோகத்தில் நா அழகப்பன் என்ற படத்தில் மட்டும் தான் நடித்திருக்கிறாராம். அதன் பிறகு விவேக்குடன் இரண்டு படங்களில் கமிட் ஆகி இருந்தாராம் . அதன் காரணமாகவே இதுவரை வடிவேலு தேவிஸ்ரீயை தன் படத்தில் நடிக்க அழைக்கவே இல்லையாம். காரணம் விவேக் படத்தில் நடித்ததனால் என்று கூறினார்.


நாய் சேகர் படத்தில் கூட தேவி ஸ்ரீ வடிவேலுவுக்கு போன் செய்து வாய்ப்பு கேட்டாராம். அப்போது இவர் யார் என்று தெரியாத அளவிற்கு பேசினாராம் வடிவேலு. அதன் பிறகு இந்திரலோகத்தில் நா அழகப்பன் படத்தில் நடித்திருக்கிறேன் என்று சொன்ன பிறகுதான் ஓ குண்டச்சியா என கேட்டாராம். இவர் ஆம் என்று சொன்னதும் சரி சரி ஏதாவது வாய்ப்பு இருந்தால் சொல்கிறேன் என்று சொல்லி போனை வைத்து விட்டாராம் .


அதன் பிறகு தான் வடிவேலுவை பற்றி எல்லா விவரங்களும் தனக்குத் தெரியும் என தேவி ஸ்ரீ கூறினார். ஆனால் முதலில் அவரைப் பற்றி நல்லவிதமாக தான் நினைத்திருந்தேன் என்றும் இப்பொழுது அவர் நடந்து கொண்டிருக்கும் விதம் தன்னை கொஞ்சம் அதிருப்தி அடைய வைக்கிறது என்றும் கூறினார்.


Advertisement

Advertisement