• Jul 26 2025

'என்னால் 150 வயது வரை உயிரோடு இருக்க முடியும்'.. ரகசியத்தை சொன்ன நடிகர் சரத்குமார்..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் சரத்குமார் தமிழ் சினிமாவில் தற்போது குணச்சித்திர வேடங்களில் மட்டும் நடித்து வருகிறார். அது மட்டுமின்றி சமத்துவ மக்கள் கட்சி நடத்தி வரும் அவர் அரசியலிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

மேலும் அவ்வப்போது பேட்டிகளில் சரத்குமார் பேசும் விஷயங்கள் இணையத்தில் வைரல் ஆவதுண்டு. தற்போது தான் 150 வருடம் வாழ முடியும் என சரத்குமார் பேசி இருப்பது வைரலாகி இருக்கிறது.

சமீபத்தில் அவரது கட்சியின் கூட்டத்தில் பேசிய அவர் "நான் 70 வயதை நெருங்கிவிட்டேன், ஆனால் இப்போதும் 25 வயது இளைஞன் போல இருக்கிறேன். என்னால் 150 வயது வரை இருக்க முடியும்."

"என்னை 2026ல் முதலமைச்சர் ஆக்குங்கள், அப்போது அதற்கான ரகசியத்தை சொல்கிறேன்" என சரத்குமார் கூறி இருக்கிறார். 

Advertisement

Advertisement