• Jul 25 2025

ஒரு வாரமா ஆம்பளைங்க சமைச்சோமே தாங்க முடில- தைரியமாக உண்மையை சொன்ன ஏடிகே- இதுக்கெல்லாம் ஒரு தில்லு வேணும்

stella / 2 years ago

Advertisement

Listen News!


பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து கடந்த வாரம் ராம் மற்றும் ஆயிஷா ஆகியோர் வெளியேறினார்கள். இதனை அடுத்து இந்த வாரம் யார் வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாகவே காணப்படுகின்றது. இருந்தாலும் குறைவான வாக்குகளை மணிகண்டன் பெற்றுள்ளதால் அவர் தான் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இதில்தான் நேற்று வாரத்தின் முதல் நாளே கிச்சன் டீமில் சண்டை முளைத்தது. தனலட்சுமிக்கு ஷிவினுக்குமான இந்த சண்டை பழைய சரஸ்வதி சபதம் படத்தில் வரும் கல்வியா செல்வமா ரேஞ்சுக்கு போகவில்லை என்றாலும், தோசையா, சோறா என்கிற அளவில் செம்ம கலாட்டாவாக நடந்து கொண்டிருந்தது. 


இந்த நிலையில் அங்கு வந்த ஏடிகே பேசிய வசனம் தான் ட்ரெண்ட் ஆகியுள்ளது, ஆம், கடந்த வாரங்களில் கிச்சன் டீமில் ஆண்கள் சமைத்துக் கொண்டிருந்தனர்.முன்னதாக கிச்சன் டீமில் சமைப்பவர்கள் எல்லாம் நாமினேஷன்லயே வருவதில்லை. அது அவர்களுக்கு ஒரு பாதுகாப்பு கூடாரம் என தனலட்சுமி நங்கூரம் போட, அப்போது கமல்ஹாசன், இது பழிவாங்கலா? அல்லது உரிமைக்குரலா? என சூழ்ச்சமத்தை கண்டுபிடிக்கும் வகையில் ஒரு கேள்வியை கேட்டார்.

இருப்பினும் தனா சொன்னதில் உண்மையும் நியாமமும் இல்லாமல் இல்லை என்று விளக்கிய கமல், அதை ஃபிக்ஸ் பண்ண சொல்லி கறாராக சொல்லி இருந்தார். அதன்படி என்னவோ கடந்த வாரம் ஆண்களை சமைக்கக் கூடிய சூழல் இயல்பாகவே அமைந்தது.


இந்நிலையில் தான் மீண்டும் தனா, ஷிவின் சண்டையை கிச்சனில் பார்த்த ஏடிகே,  “போன வாரம் நாலு ஆம்பளைங்க சேர்ந்து சமைச்சோமே... ஒரு சின்ன சத்தமாவது வந்துதா.. சொல்லுங்க தெய்வமே.. சொல்லுங்க?” என்கிற தொனியில் கேட்டதும் ரசிகர்கள்  சிரித்துவிட்டனர். சபாஷ் கேட்டாரு பாருங்க கேள்வி என்று ஏடிகேவின் பேச்சுக்கு சப்போர்ட் பண்ணியதுடன், “அதுவும் கிச்சன் டீமில் எவ்வளவு தைரியமா போய் உண்மையை சொல்றாரு மனுசன்” என மீம்ஸ்களை பறக்கவிட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



















Advertisement

Advertisement