• Jul 26 2025

இந்த வாரம் ராமிற்கு பதிலாக வெளியேறப் போவது இவரா... நம்பவே முடியல... அப்போ இனிமேல் நிகழ்ச்சி சுவாரஸ்யமே இருக்காது..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6ஆவது சீசனானது யாருமே எதிர்பாராத வகையில் நாளுக்கு நாள் களை கட்டிய வண்ணமே இருக்கின்றது. அந்தவகையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களிடையே ஓப்பன் நாமினேஷன் நடைபெற்றது. அதில் வழக்கமான பல்லவி போன்று அசீம் நாமினேட் செய்யப்பட்டார். 

அவரைத் தொடர்ந்து கதிரவன், தனலட்சுமி, ராபர்ட் மாஸ்டர், ராம், அமுதவாணன் மற்றும் மணிகண்டன் உள்ளிட்ட போட்டியாளர்களும் தொடர்ந்து நாமினேட் செய்யப்பட்டனர். இவ்வாறு முகத்துக்கு நேராக நாமினேட் நடந்த நிலையில், இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் ஏகப்பட்ட பழிவாங்கும் படலங்களும் அவர்களுக்கிடையில் அரங்கேறின.


மேலும் கடந்த வாரம் கதிரவன் தான் முதலில் சேவ் ஆனார். அதேபோல் கடைசியாக விளிம்பு நிலைக்கு அசீம் தள்ளப்பட்டார். ஆனாலும் ரசிகர்களுக்கிடையில் இடம்பெற்ற கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பில் எல்லாம் அசீம் தான் அதிகளவான ஓட்டுக்களை பெற்று இருந்தார். 

இந்நிலையில் கடந்த வாரத்தைப் போன்று இந்த வாரமும் கதிரவன் தான் முதலில் சேவ் ஆவாரா? அல்லது இந்த வாரமும் அதிக ஓட்டுக்களுடன் அசீம் சேவ் ஆவாரா? என்கிற கேள்வி பிக்பாஸ் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.


மேலும் ஜனனியை அம்பாக பயன்படுத்தி விளையாடி வரும் அமுதவாணன், அதேபோல் ரச்சிதா நோ சொல்லியும் தொடர்ந்து ஜொள்ளு விட்டு வரும் ராபர்ட் மாஸ்டர் மற்றும் நீதிபதியாக இருந்தாலும், கேஸில் ஜெயித்தது இவங்க தான் ஆனால் நான் வெற்றியாளர் இவங்கன்னு சொல்றேன் என காமெடி செய்த நைட் டிரெஸ் பாய் ராம் உள்ளிட்டோர் இந்த வாரம் டேஞ்சர் ஜோனில் உள்ளனர்.

அதுமட்டுமல்லாது கடந்த வாரம் மிக்சர் சாப்பிட்டுக் கொண்டு தூங்கி ரெஸ்ட் எடுத்து வருகிறார் என ஆயிஷா உள்ளிட்ட பலரும் ராமைக் கலாய்த்து இருந்தனர். அதாவது கடந்த வாரம் ராம் தான் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறுவார் எனப் பலரும் எதிர்பார்த்து வந்த நிலையில் திடீரென கடைசி இடத்துக்கு கொஞ்சம் மேலே போய் சேவ் ஆகி விட்டார்.


இவ்வாறாக இந்த வாரமும் ராம் தான் வெளியே போவார் எனப் பலரும் எதிர்பார்த்த நிலையில் அவர் இந்த வாரமும் வெளியேற மாட்டார் என ஒரு தகவல் இணையத்தில் கசிந்துள்ளது. அதாவது ரச்சிதாவுடன் ரொமான்ஸ் செய்கிறேன் என்ற பெயரில் கடந்த வார இறுதியில் ரசிகர்களை ரொம்பவே கடுப்பேற்றிய ராபர்ட் மாஸ்டருக்குத் தான் இந்த வாரம் குட் பை சொல்ல பிக்பாஸ் ரசிகர்கள் ரெடியாகி விட்டனர் எனக் கூறப்படுகின்றது.


அந்தவகையில் கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பில் கடைசி இடத்தில் இப்போதைக்கு ராபர்ட் மாஸ்டர் தான் உள்ளாராம். எனவே அவர் தான் வெளியேறுவார் எனப் பலரும் கூறி வருகின்றனர்.

Advertisement

Advertisement