• Jul 25 2025

கில்லி படத்திற்காக விஜய் வாங்கிய சம்பளம்... வெறும் இவ்வளவு தானா..? நம்பவே முடியல..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகாலமாக முன்னணி ஹீரோவாக இருப்பவர் நடிகர் விஜய். நடிப்பிலும் சரி, நடனத்திலும் சரி இவரை யாருமே அடிச்சுக்க முடியாது என்று கூறுமளவிற்கு தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி இருக்கின்றார். அதுமட்டுமல்லாது மார்க்கெட் ரீதியாக உலகளவில் பல உச்சங்களையும் தொட்டுவிட்டார்.


இவர் நடிப்பில் உருவான படங்களோ ஏராளம். அந்தவகையில் அடுத்ததாக இவர் நடிப்பில் 'வாரிசு' திரைப்படம் வெளியாகவுள்ளது. இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகவுள்ள இப்படத்தின் ட்ரைலருக்காக தான் ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.


இவ்வாறாக விஜய் நடிக்கும் அனைத்தும் படங்களுமே ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு இருப்பது வழமை. அந்தவகையில் விஜய்யின் நடிப்பில் உருவாகி மாபெரும் வெற்றியடைந்த திரைப்படங்களில் ஒன்று 'கில்லி'. தரணி இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து திரிஷா, பிராகாஷ் ராஜ் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்களும் நடித்திருந்தார்கள்.


மேலும் இதுவே விஜய்யின் முதல் ரூ. 50 கோடி வசூல் செய்த திரைப்படமாகும். இந்நிலையில், கில்லி படத்திற்காக நடிகர் விஜய் ரூ. 4 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதாவது வாரிசு படத்திற்காக ரூ. 120 கோடி சம்பளம் வாங்கியுள்ள விஜய் கில்லி படத்திற்காக ரூ. 4 கோடி மட்டுமே வாங்கியுள்ளார். இதுவே அவரின் அசைக்க முடியாத சாதனை என திரையுலகில் பலரும் கூறி வருகின்றார்கள்.

Advertisement

Advertisement