• Jul 24 2025

என்னால முடியல.. திடீர்னு கத்திஅழுத ஜனனி..தேற்றும் போட்டியாளர்...தீயாய் பரவும் வீடியோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி 21 போட்டியாளர்களுடன் ஒளிபரப்பாகி 7வது வாரத்தை கடந்துள்ளது.

இந்த 21 போட்டியாளர்களுள்  பலரையும் கவர்ந்த ஜிபி முத்து முதலிலேயே வெளியேறினார்.எனினும்  இதனை தொடர்ந்து முதல் எலிமினேஷனாக ‘மெட்டி ஒலி’ சாந்தி வெளியேற்றப்பட்டார். இதன் பின்னர் அசல், ஷெரீனா, மகேஷ்வரி ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். இதனையடுத்து, கடந்த வார இறுதியில் நிவாஷினி வெளியேற்றப்படுவதாக கமல் தெரிவித்தார்.

இவ்வாறுஇருக்கையில் , பிக்பாஸ் வீட்டினுள் கோர்ட் டாஸ்க் துவங்கி இருக்கிறது. இதன்படி, பிக்பாஸ் வீடு இந்த வாரம் நீதிமன்றமாக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் நீதிமன்றம் என்ற பெயரில் இந்த டாஸ்க் ஆரம்பமாகும் நிலையில், ஒவ்வொருவராக தங்களது வழக்கு என்ன என்பதை மெயின் டோர் கேமரா முன்பு பதிவு செய்யலாம். இதன் பின்னர் குற்றம் சாட்டப்பட்ட நபருக்காக வழக்கறிஞரை தேர்வு செய்து அவரது வழக்கை தயார் செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



முன்னதாக விக்ரமன் மீது வழக்கு தொடுத்திருந்தார் அமுதவாணன். தன்னை வில்லாகவும், ஜனனியை அம்பாகவும் விக்ரமன் குறிப்பிட்டதாக கூறி அமுதவாணன் கொடுத்த வழக்கில் ADK நீதிபதியாக இருந்தார். இந்த வழக்கில் அமுதவாணனின் வழக்கறிஞராக அசீம் செயல்பட்டார். அத்தோடு  அசீமின் வாதத்தை பாராட்டியதோடு, இந்த வழக்கின் வெற்றியாளர் அவர் தான் எனவும் ADK சொல்லியிருந்தார்.

இவ்வாறுஇருக்கையில் , டைனிங் டேபிளில் அமுதவாணனோடு சாப்பிட்டு கொண்டிருக்கிறார் ஜனனி. அப்போது "இந்த வழக்கு முடிஞ்சுபோச்சு அம்பு, வில் யாரும் இல்லைன்னு சொல்லிட்டாங்க என அமுதவாணன்" கூறுகிறார். இதைத் தொடர்ந்து பேசிய ஜனனி,"என்னால முடியல. நான் வீக் ஆகிட்டே இருக்கேன்னு தோணுது. என் டவுட்களை கிளியர் பண்ண அவர்கிட்ட பேசணும். ஆனால் அவரும் பேசமாட்டேங்குறாரு. அவருக்கு அது புரியவே இல்லை. நான் நார்மலா தான் இருப்பேன். திடீர்னு வீக்கான என்னைவிட மோசமா யாரும் இருக்க மாட்டாங்க.. கஷ்டமா இருக்கு" என சொல்லிக்கொண்டிருக்கும்போதே அழுதுவிடுகிறார்.



அப்போது அருகில் இருந்த அமுதவாணன்,"அழாத, எல்லோரும் வந்து என்ன என்னன்னு கேப்பாங்க.அத்தோடு  நீ எவ்வளவு ஸ்டராங்கான பொண்ணு. உன்னை பார்த்து நான் ஆச்சர்யப்பட்டிருக்கேன். இதுக்கு போய் அழலாமா? விடு" என ஜனனியை தேற்றுகிறார்.




 


Advertisement

Advertisement