• Jul 26 2025

"என்னால் அழக் கூட முடியவில்லை".. மன அழுத்தத்தால் வருந்தும் பிரபல நடிகை.. கவலையில் ரசிகர்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

பிரபல மலையாள தொலைக்காட்சி நடிகையான ஸ்ருதி ரஜினிகாந்த் ஃப்ளவர்ஸ் டிவியில் ஒளிபரப்பான 'சக்கப்பழம்' என்ற தொடரின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரும் புகழும் பெற்றார். அதுமட்டுமல்லாது 'உன்னிக்குடன், மானசபுத்ரி, எட்டு சுந்தரிகளும் ஞானும்' உள்ளிட்ட பல தொடர்களிலும் நடித்துள்ளார். 


இந்நிலையில் சமீபத்தில் ஸ்ருதி மனச்சோர்வை சமாளிப்பது பற்றி ஓப்பனாக பேசியுள்ளார். அந்தவகையில் அவர் கூறுகையில் "என்னால்  நிம்மதியாக தூங்கக்கூட முடியவில்லை, இதை எப்படி மற்றவர்களுக்கு விளக்குவது என்றும் தெரியவில்லை. சிலருக்கு நம் நிலைமை என்னவென்று தெரியாமல் இருக்கும். அதைச் சொன்னாலும் அவர்களுக்குப் புரியாது" என்றார்.


மேலும் "என்னதான் வேலை செய்துவிட்டு கண்ணை மூடிக்கொண்டாலும் தூக்கம் வராது. ஒவ்வொரு விஷயமும் இப்படித்தான் சிந்திக்கப்படுகிறது. இதனை நினைத்து  நான் முதலில் மிகவும் அழுதேன். என்னால் இப்போது அழவும் முடியவில்லை" என தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாது "இந்த பிரச்சினையை நான் மட்டும் அனுபவிக்கவில்லை. என் தலைமுறையில் உள்ள நிறைய பேர் இதனை அனுபவித்து இருக்கிறார்கள். இப்படித்தான் ஒருநாள் இன்ஸ்டாகிராம் செயலியில் யாராவது மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறார்களா என்று ஒரு கேள்வி வந்தது. அதற்கு பயனாளர்கள் கொடுத்த பதிலால் இன்ஸ்டாகிராம் நிரம்பி வழிந்தது என்றே கூறலாம்.


இங்கு யாரும் மகிழ்ச்சியாக இல்லை. ஏன் எல்லோரும் முகமூடி அணிந்து வாழ்கிறார்கள்? என தெரியவில்லை. நீங்கள் சரியில்லை என்று ஒருவரிடம் சொல்வதை இயல்பாக்க முயற்சிப்போம்" எனவும் அவர் கூறியுள்ளார். 

இதனைத் தொடர்ந்து உங்கள் மனதானது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பது முக்கியம். எவ்வளவு பணம் இருந்தாலும், நீங்கள் விரும்பும் நபர்களுடன் சிறிது நேரம் செலவழிக்க முடியாமல் போனாலோ, அல்லது நீங்கள் விரும்பும் வேலையை அவர்களுடன் அனுபவிக்க முடியாவிட்டாலோ நீங்கள் என்ன செய்ய முடியும்? என சற்று சிந்தித்து பாருங்கள். கையில் ஐந்து பைசா இல்லாவிட்டாலும் மகிழ்ச்சியாக வாழ்வது அதிர்ஷ்டம் என" கூறியுள்ளார் ஸ்ருதி ரஜினிகாந்த்.

Advertisement

Advertisement