• Jul 24 2025

அதை பண்ணும் போது கனத்த இதயத்தோட தான் பண்ணினேன்- உருக்கமாக பேசிய விக்ரமன்.. நெகிழ்ந்த போட்டியாளர்கள்..!

stella / 2 years ago

Advertisement

Listen News!

ஆறாவது பிக் பாஸ் சீசனில் கடைசி நாமினேஷன் இந்த வாரம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் அனைத்து போட்டியாளர்கள் முன்னிலையில் இந்த நாமினேஷன் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பிரபலங்கள் பலரும் பிக்பாஷ் வீட்டிற்குள் வந்து கொண்டிருக்கின்றனர்.

இப்படி பரபரப்பான சம்பவங்கள் ஒருபக்கம் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், பிக்பாஸ் வீட்டுக்குள் விஜே பார்வதி மற்றும்  விஜே ஷோபனா ஆகியோர் நேற்றைய தினம் வந்திருக்கின்றனர். போட்டியாளர்களுடன் இருவரும் பேசிக்கொண்டிருக்கும் நிலையில், நாமினேஷன் பற்றியும் வீட்டில் இருந்து வெளியேறுவது பற்றியும் ஷோபனா பேசுகிறார்.


அப்போது பேசும் விக்ரமன்,"நேற்று ஒரு நாமினேஷன் பண்ணோம். உண்மையிலேயே அது ரொம்பவே கனமா இருந்தது. கடைசி நாமினேஷன் அது. அப்பவும் ஒருத்தரை விமர்சனம் செஞ்சு வெளியில அனுப்பனும் அப்டிங்குறது எனக்கு ரொம்பவே கனமா இருந்துச்சு.

 கனத்த இதயத்தோட தான் இத பண்றேன்னு சொல்லிட்டு தான் செஞ்சேன். இதுவரைக்கும் செஞ்ச நாமினேஷன்லேயே நேற்று பண்ணது ரொம்ப ஹெவியா இருந்துச்சு" என்றும் தெரிவித்தார்

Advertisement

Advertisement