• Jul 25 2025

சிம்பு கூறியதால் தான் நான் இப்படி செய்தேன்-சுவாரஸியமான தகவலைப் பகிர்ந்த விக்னேஷ் சிவன்

stella / 3 years ago

Advertisement

Listen News!

இந்திய திரைப்பட இயக்குநர், பாடகர், பாடலாசிரியர், நடிகர் என தமிழ் திரையுலகில் பணியாற்றி வருபவர் விக்னேஷ் சிவன். நானும் ரௌடி தான் திரைப்பட காலத்தில் இருந்தே காதலராக வலம் வந்த இவருக்கும், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவிற்கும் கடந்த ஜூன் மாதம் 9- ஆம் திகதி பிரமாண்டமாக மகாபலிபுரத்தில் திருமணம் நடைபெற்றது.

தமிழ் சினிமாவில் ரசிகர்களால் பெரியளவில் கொண்டாடப்பட்டு வரும் ஒரு இளம் ஜோடியாக இவர்கள் விளங்குகின்றார்கள். இந்நிலையில் இயக்குநராக மட்டுமன்றி பாடலாசிரியராகவும் ஜொலித்து வருகின்ற விக்னேஷ் சிவன் சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் சிம்பு பற்றி கூறியுள்ளார்.

அதாவது "எனக்குள் இருக்கும் பாடலாசிரியர் திறமையைத் தூண்டி விட்டது சிம்பு தான். போடா போடி படத்தின் போது சிம்பு பாடல் வரிகளை எழுதும் போது என்னிடமும் இரண்டு வரிகளை எழுதச் சொல்வார். அப்படி அவர் கொடுத்த நம்பிக்கை தான் இப்போது என்னால் சிறந்து விளங்க முடிகிறது." எனக் கூறியுள்ளார்.

நயன்தாராவின் முன்னாள் காதலனான நடிகர் சிம்பு குறித்து விக்னேஷ் சிவன் இவ்வாறு கூறியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement