• Jul 24 2025

நான் பிளான் பண்ணி Pregnant ஆகல, ஆனால் ரொம்ப கஷ்டப்படுத்தினாங்க- முதன்முறையாக குழந்தைப் பேறு பற்றி பேசிய ஆல்யா மானசா

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் பிரபலமான ஜோடியாக இருப்பவர்கள் சஞ்சீவ் ஆல்யா தம்பதி. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் நடித்து கொண்டிருக்கும் போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. பின்னர், கடந்த 2019-ல் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த காதல் ஜோடிக்கு, ஏற்கனவே ஐலா என்ற மகள் இருக்கிறார். 

ஆல்யா மானசா முதல் குழந்தை பிறந்த பிறகு உடல் எடையை குறைத்து ராஜா ராணி 2 சீரியலில் சித்துவிற்கு ஜோடியாக, சந்தியா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இந்த ஜோடிக்கு ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். இடையில் அவர் இரண்டாவது முறையாக கர்ப்பமானார். குழந்தை பிறக்க இருக்கும் சில நாட்களுக்கு முன்பு சீரியலில் இருந்து வெளியேறினார்.


 தொடர்ந்து ஆல்யா மானசாவிற்கு ஆண் குழந்தையும் பிறந்தது இதனை அடுத்து ஆல்யா சன்டிவியில் ஒளிபரப்பாகும் இனியா என்னும் சீரியலில் நடித்து வருகின்றார். இப்படியான நிலையில் அண்மையில் ஒரு பேட்டியளித்திருந்தார். அதில் அவர் கூறியதாவது


இரண்டு குழந்தைகள் பெறுவதைப் பற்றி நாங்க எதுவும் பிளான் பண்ணல. அது தானாக கிடைத்தது தான். குழந்தை கிடைக்க இருக்கும் போது சீரியல்கள் பண்ணிட்டு இருந்ததால் நிறைய பேர் சொன்னாங்க இனிமேல் அவ்வளது தான் சீரியலில் கதாநாயகியாக எல்லாம் நடிக்க முடியாது கம்பேக் கொடுக்க முடியாது என்றும் சொன்னார்கள். ஆனால் இப்போ அதை எல்லாம் தாண்டி குழந்தைகளை பெற்றதுக்கு பிறகு நடிக்கிறேன் என்று நினைக்கும் போது ரொம்ப சந்தோஷமாக இருக்கு என்றும் தெரிவித்துள்ளார்.



Advertisement

Advertisement