• Jul 23 2025

நீங்க எவ்ளோ வேணா ட்ரோல் பண்ணிக்கோங்க எனக்கு கவலையில்லை- கணவருக்கு பாத பூஜை செய்த பிரணிதா

stella / 2 years ago

Advertisement

Listen News!


கன்னடம், தெலுங்கு மற்றும் தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளவர் தான் நடிகை பிரணிதா.தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான சகுனி திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகினார்.

தொடர்ந்து சூர்யாவுக்கு ஜோடியாக மாஸ் என்கிற மாசிலாமணி, அதர்வாவுக்கு ஜோடியாக ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஆனால், இவர் நடித்த படங்கள் ஹிட் அடிக்காத நிலையில், கோலிவுட் படங்களில் நடிப்பதையே விட்டு விட்டு கன்னட படங்களில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.


ஆடி அமாவாசை என்றும் பீமண அமாவாசை என்றும் கொண்டாடப்படும் பெரிய ஆமாவாசையை முன்னிட்டு தனது கணவர் நிதின் ராஜுவின் பாதங்களுக்கு பாத பூஜை செய்த போட்டோவை இணையத்தில் ஷேர் செய்திருக்கிறார் நடிகை பிரணிதா.

கடந்த ஆண்டும் இதே போலவே தனது கணவருக்கு பாத பூஜை செய்யும் போட்டோவை பதிவிட்ட நிலையில், பிரபல நடிகையாக இருந்தாலும், கணவரின் காலுக்கு கீழ் தான் என்றும், ஆணாதிக்கம் தலை தூக்கி நிக்குது பாருங்க என ஏகப்பட்ட ட்ரோல் மீம்கள் பதிவிடப்பட்டன.


இந்நிலையில், நீங்க எவ்ளோ வேணா ட்ரோல் பண்ணிக்கோங்க, ஆனால், இது சனாதான தர்மம்.. நான் எப்போதும் என்னுடைய சனாதான தர்மத்தை கடைபிடிப்பேன் என நடிகை பிரணிதா தனது போஸ்ட்டுக்கு கேப்ஷனும் கொடுத்துள்ளார்.


நீங்க உங்க கணவருக்கு பாத பூஜை செய்வதெல்லாம் ஓகே தான். ஆனால், உங்களுக்கு மட்டும் பப்ளிசிட்டி வேண்டும் உங்கள் புருஷனுக்கு பப்ளிசிட்டி இருக்கக் கூடாது என அவரது முகத்தைக் கூட காட்டாமல் கிராப் பண்ணிட்டீங்களே ஏன்? என இந்த ஆண்டு வேற விதமாக நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். எந்த இந்து மதத்தில் பிகினி அணிந்துக் கொண்டு வலம் வரலாம் எனக் கூறுகின்றனர். நீங்கள் ஏன் குழந்தை பெற்றும் பிகினி போட்டோக்களை பதிவிடுறீங்க என்றும் ட்ரோல் செய்து வருகின்றனர்.

Advertisement

Advertisement