• Jul 25 2025

BB கொண்டாட்டத்துக்கு போனப்போ அவங்கள நான் திரும்பி கூட பார்க்கல- விக்ரமன் குறித்து ஓபனாக பேசிய தனலட்சுமி

stella / 2 years ago

Advertisement

Listen News!


பிக்பாஸ் நிகழ்ச்சியானது முடிவடைந்து ஒரு மாதம் ஆகியும் தற்பொழுதும் பரவலாக இந்த நிகழ்ச்சி குறித்து பேசப்பட்டு வருகின்றது.அத்தோடு போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் பல்வேறு சேனல்களிலும் பேட்டியளித்து வருகின்றார். இதன் டைட்டில் வின்னராக அசீம் தேர்வாகியுள்ளார். இரண்டாவது இடத்தை விக்ரமனும் மூன்றாவது இடத்தை ஷிவினும் பிடித்து இருந்தனர்.

இந்த நிலையில்  பிரத்யேகமாக நடத்திய "மக்களுடன் அசீம்" என்ற நிகழ்ச்சியில் அசீம் கலந்து கொண்டார். அவருக்கு அரங்கத்தில் இருந்த மக்கள் அனைவரும் அசத்தலான வரவேற்பை வழங்கி இருந்தனர். இதில் தனலட்சுமியும் விருந்தினராக கலந்து கொண்டிருந்தார். பிக் பாஸ் வீட்டில் அவர்கள் இருவரும் அதிகம் சண்டை போட்டிருந்தாலும் இறுதியில் அண்ணன், தங்கை போல தான் மாறி இருந்தனர். அப்படி ஒரு சூழலில் மக்களுடன் அசீம் என்ற நிகழ்ச்சியிலும் தனலட்சுமி கலந்து கொண்டு பல்வேறு கருத்துக்களை பேசி இருந்தார்.


மேலும், பிக் பாஸ் வீட்டில் விமர்சனத்தை சந்தித்த பல்வேறு விஷயங்கள் குறித்தும் தன் சார்பிலான விளக்கங்களை தனலட்சுமி தெரிவித்திருந்தார்.இது தொடர்பாக வேறு சில விஷயங்களை பேசி இருந்த தனா, "திரும்பி பிக் பாஸ் வீட்டுக்குள்ள நான் என்ட்ரி ஆகும்போது எனக்கு யார் கூட எந்த சண்டையும் இருக்க கூடாது, எல்லார்கிட்டயும் நல்லா பேசணும் அப்படிங்குறதுக்காக அவங்ககிட்ட கூட நான் கை கொடுத்து பேசிட்டு தான் நான் வெளியே வந்தேன். எல்லாருமே பார்த்திருப்பீங்க. வெளிய வந்து ஒவ்வொரு இன்டர்வியூல போயி Abuse ன்னு சொல்றாங்க. அப்போ உங்களுக்கு சின்ன புள்ளங்குறது தெரியலையா. சின்ன புள்ளையை இந்த மாதிரி உங்களோட விஷயத்துக்காக யூஸ் பண்றேன்ங்குறது தெரியலையா.


இந்த தடவை நான் BB கொண்டாட்டத்துக்கு போனப்போ அவங்கள நான் திரும்பி கூட பார்க்கல. எனக்கு பயமே இல்லை. நான் பார்க்கவே இல்ல. ஏன்னா வெளிய வந்ததுக்கு அப்புறம் அவங்க ஆடுனாங்க பாருங்க ஒரு கேம், அதுக்குள்ள போறதுக்கு எனக்கு விருப்பம் இல்லை" என தனலட்சுமி தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement