• Jul 25 2025

எனக்கு அம்மா அப்பா கிடையாது அதிகமா நேசிக்கிறது விக்ரமன் அண்ணாவைத் தான்-கண்கலங்கிய ரசிகர்!!

stella / 2 years ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகி முடிவடைந்த ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 6. இந்த நிகழ்ச்சிக் கென்று தனி ரசிகர் பட்டாளமும் காணப்படுகின்றது.சுமார் 106 நாட்கள் நடந்த இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டிருந்தனர். 

கலகலப்பு, சண்டை, வாக்குவாதங்கள், சவாலான டாஸ்க் என மொத்தமும் இந்த பிக் பாஸ் சீசன் விறுவிறுப்பு நிறைந்த வண்ணம் தான் இருந்தது.இந்த நிகழ்ச்சியின் ஃபினாலேவில் அசீம், ஷிவின் மற்றும் விக்ரமன் ஆகிய மூன்று பேர் முன்னேறி இருந்தனர். இதில் அசீம் டைட்டில் வின்னராகவும், விக்ரமன் இரண்டாவது இடத்தையும், ஷிவின் மூன்றாவது இடத்தையும் பிடித்திருந்தனர்.


பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்து நிறைய நாட்கள் ஆகியும் தொடர்ந்து பிக்பாஸ் போட்டியாளர்கள் மற்றும் பிக் பாஸ் குறித்த பேச்சுகள் இணையத்தில் அதிகம் பரவலாகவும் இருந்து வருகிறது.இந்த நிலையில், பிரபல சேனல் நடத்திய "மக்களுடன் விக்ரமன்" என்ற நிகழ்ச்சியில் விக்ரமன் கலந்து கொண்டார். அப்போது அவரது பெற்றோரும் கலந்து கொண்டு மகன் விக்ரமன் குறித்து பேசி இருந்தனர்.

 மேலும், வீடியோ கால் மூலம் பேசிய அவர் தங்கையும் நிறைய விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.இந்த நிகழ்விற்கு மத்தியில் தன்னுடைய ரசிகர்களுடன் உரையாடி இருந்தார் விக்ரமன். அப்போது பேசிய ரசிகர் ஒருவர், "அந்த ஒரு நாள் நான் சாப்பிடாமல் ரிசல்ட் என்னன்னு பார்த்துட்டு இருந்தேன். அன்னைக்கு சாயங்காலம் இந்த மாதிரி ரிசல்ட் மாறும் போது, சாப்பிடாம இருந்ததுனால ஒரு மாதிரி உடம்பு சரியில்லாம ஆகி ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணாங்க. 


அந்த டைம்ல நான் ட்ராவல்ல இருந்ததுனால பக்கத்துல இருந்தவங்க ஹெல்ப் பண்ணாங்க. நான் விக்ரமன் அண்ணனுக்கு ஏன் சப்போர்ட் பண்ணுனா, எனக்கு அப்பா, அம்மா கிடையாது. எங்க அப்பா அம்மாவுக்கு அப்புறம் நான் ரொம்ப நேசிச்சது, நேசிச்சு ரொம்ப அழுத ஒரு ஆள்னா விக்ரமன் அண்ணா மட்டும் தான்.

அவர மாதிரியே வரணும்னு ஆசைப்படுறேன். அவரோட வழியை நான் பின்பற்றுவேன்னு நம்புறேன். அறம் வெல்லும்" என கண்ணீர் கலந்து சற்று உருக்கத்துடன் பேசி இருந்தார் அந்த ரசிகர். இதற்கடுத்து கண்ணீருடன் இருந்த தனது ரசிகரை தேற்றவும் செய்தார் விக்ரமன் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement