• Jul 24 2025

''எனக்கு ஒன்னுமில்ல, சீக்கிரம் வந்துடுவேனு போனாங்க''..மறைந்த சீரியல் நடிகை விஜயலட்சுமி குடும்பத்தினர் கதறல்..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ்த் திரையுலகைப் பொறுத்தவரையில் சமீபகாலமாக தொடர் மரணங்கள் இடம்பெற்று ரசிகர்களை அதிர்ச்சியில் மூழ்கடித்து வருகின்றது. அந்த வகையில் தற்போது சின்னத்திரை பிரபலம் ஒருவரும் மரணமடைந்துள்ளார்.

அதாவது 10க்கும் அதிகமான படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துப் பிரபலமானவரும் சின்னத்திரையில் 'சரவணன் மீனாட்சி, பாரதி கண்ணம்மா' போன்ற பல சீரியல்களில் நடித்தவருமானவருமான பழம்பெரும் நடிகை தான் விஜயலட்சுமி. இவர் பல சீரியல்களில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்தாலும், நிஜத்தில் எந்நேரமும் சிரித்த முகத்துடன், அனைவரிடமும் அன்பாக  பழகும் குணம் கொண்டவர்.

இந்நிலையில் 70 வயதாகும் இவர் இன்று காலை தூக்கத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகின்றது. நடிகை விஜயலட்சுமி கடந்த சில மாதங்களாகவே சிறுநீரக பிரச்சனையால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை எடுத்து வந்துள்ளார். அதுமட்டுமல்லாது சில தினங்களுக்கு முன்பு, பாத்ரூமில் இருந்து வழுக்கி விழுந்து தலையில் பலமாக அடிபட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் தொடர் சிகிச்சையில் இருந்து வந்த இவர், நேற்றைய தினம் தான் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வந்தார். இதன் பின்னரும் தொடர்ந்து சோர்வாகவே இருந்த அவர் இன்று மனனமடைந்துள்ளமை சின்னத்திரை ரசிகர்களை சோகத்தில் மூழ்க வைத்துள்ளது.

இவரின் மறைவுக்கு ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் உட்படப் பலரும் தங்களின் இரங்கல்களை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில் அவரது உறவினர்கள்,நண்பர்கள் இவரை பற்றி பேசி அழுதுகொண்டே இருக்கிறார்கள்.எனக்கு ஒன்னுமில்ல, சீக்கிரம் வந்துடுவேனு போனாங்க ஆனா திடீர்  என்று இப்படி ஆகி விட்டது.என அவரது மகள் ரொம்பவே வருத்தத்துடன் கவலையினை பகிர்ந்துள்ளார்.

Advertisement

Advertisement