• Jul 25 2025

"அவரைத் தெரியாது.. ஆனால் அவரிட மனைவியை நன்றாகத் தெரியும்"... மீண்டும் மேடையில் சர்ச்சையைக் கிளப்பிய மிஷ்கின்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ்த் திரைப்பட உலகில் இயக்குநர் மற்றும் நடிகர் என பன்முகத் திறமை கொண்ட ஒருவராகத் திகழ்ந்து வருபவர் மிஷ்கின். இவர் எளிய கதைகள், காட்சி அமைப்புகளுக்காக ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டவர். அந்தளவிற்கு பல தரமான படைப்புக்களை கொடுத்தவர். 


தொடர்ந்து பல வெற்றிப் படங்களைக் கொடுத்த இவரின் இயக்கத்தில் அடுத்து பிசாசு 2 படம் திரைக்கு வரவுள்ளது. மிஷ்கினைப் பொறுத்தவரையில் இவர் மேடையில் சர்ச்சைக்குரிய வகையில் பேசுவது உண்டு. 


இந்நிலையில் தற்போது டைனோசர்ஸ் என்ற படத்தின் ப்ரோமோஷன் விழாவில் மிஷ்கின் கலந்துக்கொண்டு பேசி இருக்கின்றார். அதுமட்டுமல்லாது அந்த விழாவில் பிரபல தயாரிப்பாளர் போனிகபூர் அவர்களும் கலந்து கொண்டார்.

அந்த சமயத்தில் மிஷ்கின் மேடையில் "எனக்கு போனி கபூரை யார் என்றே தெரியாது, ஆனால், அவர் மனைவியை நன்றாக படத்தின் மூலம் தெரியும். அவருடன் இணைந்து ஒரு படத்திலாவது உதவி இயக்குநராக பணியாற்ற வேண்டும் என்று நினைத்தேன்" எனக் கூறினார்.


அதுமட்டுமல்லாது "போனி கபூர் அவர்களுடன் அருகில் அமர்ந்து இருந்தது பெருமையாக உள்ளது" எனவும் கூறி இருக்கின்றார். எது எவ்வாறாயினும் மிஷ்கின் எதிர்பாராத விதமாக போனி கபூரை தெரியாது என்று சொன்னது ஒட்டு மொத்த மேடையையும் ஒரு நிமிஷம் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement