• Jul 26 2025

“அறிவே இல்லை..” அப்படிப்பேசுபர்களுக்கு விஜய் டிவி ஜாக்குலின் ஆவேச பதிலடி

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கலக்கப்பபோவது யாரு' என்ற நிகழ்ச்சியின் மூலம் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஜாக்லின். அதுமட்டுமல்லாது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த 'கானா காணும் காலங்கள்' மற்றும் 'ஆண்டாள் அழகர்' ஆகிய சீரியல்களிலும் நடித்து இருக்கின்றார்.


சின்னத்திரையில் மட்டுமல்லாது வெள்ளித்திரையில் நயன்தாராவின் நடிப்பில் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த 'கோலமாவு கோகிலா' என்ற படத்தில் நயன்தாராவின் தங்கையாக ஜாக்லின் நடித்து அசத்தி இருந்தார். அத்தோடு இவர் நடித்து வந்த 'தேன்மொழி' என்ற சீரியலும் நடித்துள்ளார்.


சமீபத்தில் ஜாக்குலின் பேட்டி ஒன்றில் பங்கேற்றுள்ளார். அப்போது தொகுப்பாளர் அவரிடம், "நீங்கள் லெஸ்பியன் என்று சிலர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். அதற்கு உங்கள் கருத்து என்ன?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.


இதற்கு பதில் அளித்த ஜாக்குலின், "மூன்று நண்பர்களுடன் சேர்ந்து போட்டோ போட்டாலும் தவறாக தான் கமன்ட் செய்வார்கள். ஏன் என்னை இந்த மாதிரி நினைக்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் அறிவே இல்லை. அவர்களுக்கு என்ன அப்படி உறுத்துகிறது. என்னை மட்டும் இல்லை, இது போன்று பல பிரபலங்களையும் கூறுவார்கள்" என்று ஆவேசமாக பதில் அளித்துள்ளார்.






Advertisement

Advertisement