• Jul 24 2025

சம்பளம் எப்போ வரும்னு தெரியல வந்ததற்கு பிறகு சொல்லுறேன்- பிக் பாஸில் இருந்து வந்த மைனாவுக்கு காத்திருந்த சர்ப்ரைஸ்

stella / 2 years ago

Advertisement

Listen News!

கடந்த வருடம் அக்டோபர் மாதம் ஆரம்பிக்கப்பட்டு இந்த மாதம் முடிவடைந்த நிகழ்ச்சி தான் பிக்பாஸ் சீசன் 6. இந்த நிகழ்ச்சியானது பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கி வருகின்றது.அதற்கு காரணம் பைனலில் அசீம் வின்னராக அறிவிக்கப்பட்டது தான். சமூக வலைத்தளங்களில் boycott விஜய் டிவி என்றுகூட நெட்டிசன்கள் ட்ரெண்ட் செய்தனர்.

இறுதி வாரத்தில் மொத்தம் ஆறு போட்டியாளர்கள் இருந்தனர். அதில் இரண்டு பேர் பணப்பெட்டி உடல் வெளியேறிய நிலையில், வாரத்தில் இடையிலேயே மைனா நந்தினி எலிமினேட் ஆனார். பிக் பாஸ் 6ல் பங்கேற்றுவிட்டு வீட்டுக்கு வந்த மைனா நந்தினியை அவரது குடும்பத்தினரை ஆரத்தி எடுத்து வரவேற்று இருக்கின்றனர்.


அந்த வீடியோவை மைனா தற்போது வெளியிட்டு இருக்கிறார். 'பிக் பாஸ் சம்பளம் எப்போ வரும்னு தெரியல. வந்தபிறகு ட்ரீட் பற்றி சொல்றேன்" என நண்பர்கள் எல்லோருக்கும் அவர் சொல்லி அனுப்பி வைத்திருக்கிறார்.

மேலும் மைனா படவாய்ப்பு அதிகமாக கிடைக்க வேண்டும் என்று தான் பிக்பாஸிற்குள்ளே நுழைந்தார். எனவே இவருக்கு இனி படவாய்ப்பு அதிகமாக கிடைக்கும் என்றும் ரசிகர்களால் நம்பப்படுகின்றது.


Advertisement

Advertisement