• Jul 25 2025

ஏன் திடீரென்று இப்படிப் பண்ணினாங்க என்று தெரியல... மன வருத்தத்தில் 'தாலாட்டு' சீரியல் நடிகர் கிருஷ்ணா..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகி பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த ஒரு பிரபலமான சீரியல் தான் 'தாலாட்டு'.  இந்த சீரியலில் தெய்வமகள் கிருஷ்ணா, தென்றல் ஸ்ருதி எனப் பலரும் இணைந்து நடித்திருந்தனர்.

அதிரடித் திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியலானது இடையில் சிறந்த கதை நகர்வு இல்லாதமையினால் திடீரென கடந்த வாரம் முடிவுக்கு வந்தது.


இதனைத் தொடர்ந்து கிருஷ்ணா சமீபத்தில் இடம்பெற்ற பேட்டி ஒன்றில் இது குறித்துப் பேசியுள்ளார். அதாவது "3 நாட்களுக்கு முன்னாடி தயாரிப்பாளரிடம் கேட்ட போது கூட அவர் ஆகஸ்ட் வரை இந்த சீரியல் போகும் என்று தான் சொன்னார். முடிக்க போறாங்கனு பேச்சு ஒரு மூணு மாசமாகவே போயிட்டு இருந்தது. ஆனால் கதை இருக்கும் போது ஏன் முடிக்க போறாங்கனு நாங்க எல்லோருமே நினைத்தோம். இப்படி எதிர்பாராத விதமாக நடந்தது கொஞ்சம் கஷ்டமாக தான் இருக்கு" எனத் தெரிவித்துள்ளார் கிருஷ்ணா.


Advertisement

Advertisement