• Jul 25 2025

நான் எதையுமே திருடல.. பிக்பாஸ் வீட்டில் கதறி அழும் தனலட்சுமி..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகி  தற்போது 35 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 21 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் இதுவரை 5 பேர் வெளியேறிவிட்டதால் 16 பேர் மட்டுமே எஞ்சியுள்ளனர்.

இதுவரை சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா மற்றும் மகேஸ்வரி ஆகியோர் குறைந்த வாக்குகளைப் பெற்று எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் ஜிபி முத்து சொந்த காரணங்களுக்காக பாதியிலேயே வெளியேறினார்.

இந்நிலையில் இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரமோ  வெளியாகி உள்ளது.

அதில் தனலட்சுமி கண்ணீர் வடித்து அழுதுகொண்டு இருக்கிறார்.அவ்வளவு கனவோடு இங்கு நான் வந்தேன்..இங்க இருந்து நானே அசிங்கப்படுத்திக்கொள்ளுவனோ...வெளியில் சொல்லிக்கொள்ள முடியாதளவிற்கு அவமானமாக இருக்கிறது...சின்ன விசயம் இவ்வளவு பெரிசா வெடிக்கும் எண்டு எனக்கு தெரியாது...நான் எதையும் திருடல என கண்ணீர்வடிக்கின்றார்.

இதோ அந்த ப்ரமோ....



Advertisement

Advertisement