• Jul 24 2025

நான் எதுக்கும் ஆசைப்படல! LCU பற்றி மனம் திறந்தார் சசிகுமார்

Jo / 2 years ago

Advertisement

Listen News!

‘காரி’ படத்தைத் தொடர்ந்து நடிகர் சசிகுமார் நடிக்கும் படம் ‘அயோத்தி’. இந்தப்படத்தை மந்திரமூர்த்தி இயக்கியுள்ளார். ட்ரைன் ஆர்ட்ஸ் ஆர்.ரவீந்திரன் தயாரிக்கும் இப்படத்தில் யஷ்பால் சர்மா, ப்ரீத்தி அஸ்ரானி, புகழ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். என்.ஆர்.ரகுநந்தன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்துள்ளார். 

சில நாட்களுக்கு முன் தான்  இப்படம்  திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.இப்படம் குறித்து நடிகர் சசிகுமார் பேசுகையில் , '' மனிதம் சார்ந்து இப்படம் பேசுகிறது ,அயோத்தி அப்படியென்கின்ற போது இது மதம் சார்ந்த பிரச்சினைகளை பேசப்போகிறீர்களா?அப்படி எல்லாம் கேட்டு இருந்தாங்க.இதில் மனிதம் சார்ந்து தான் பேசி இருக்கின்றோம்.

இந்தப் படத்தினை எல்லோருக்கும் பிடித்திருக்கிறது என்று நினைக்கும்போது எனக்கு மிகவும் சந்தோஷம்.எமோசன் எல்லாம் படத்தில ரொம்ப செட் ஆயிருக்கு.வந்தாரை வாழவைக்கும் தமிழகம் என்று நாங்கள் சொல்லுகிறோம் அந்த வகையில் இந்தப் படம் பார்க்கும் போதும் தமிழர்கள் எப்படி உதவி செய்வார்கள் என்பதனை படம் பார்க்கும்போது தெரிந்து கொள்வீர்கள் இப்பவே சொல்லிட்டா அது புரியாது.

இந்த படம் குறித்து எல்லாருக்கும் பல கேள்விகள் இருக்கு.ஆகவே நீங்கள் தியேட்டரில் வந்து படம் பார்க்கும் போது கேள்விக்களுக்கான பதில் தெரிய வரும்''.

மேலும் LCU ,பொன்னியின் செல்வன் படம் பத்தி நீங்க என்ன நினைக்குறிங்க? இப்படியான கதைக்களம் பண்ணனும்னு ஆசை இருக்கா ?என்ற கேள்விக்கு ''அந்தப் படங்கள்ல அவர்களுடைய கேரக்டர் ரொம்ப கரெக்டா இருக்கு, நான் எதுக்கும் ஆசைப்படல'' என்று கூறினார்.

Advertisement

Advertisement