• Jul 24 2025

உருழைக்கிழங்கு மாதிரி இருக்கிறார் எனக்கு வேணாம்- செஃப் வெங்கடேஷ் பட்டின் திருமணத்தில் நடந்த சோகம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகி முடிவடைந்த லியாலிட்ரி ஷோ தான் குக்வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் இதுவரை 3 சீசன்கள் முடிவடைந்துள்ளன.மேலும் தமிழ் சின்னத்திரையில் அதிக ரசிகர்களைக் கவர்ந்த ரியாலிட்ரி ஷோவாக இது தான் விளங்குகின்றது.

இந்த நிகழ்ச்சியை தொகுப்பாளர் ரக்ஷன் தொகுத்து வழங்குவதோடு மூன்று சீசன்களிலும் கோமாளிகளாக சுனிதா ,புகழ், ஷிவாங்கி, பாலா, குரேஷி, மணிமேகலை ,சக்தி ஆகியோர் வலம் வருகின்றனர். இவர்கள் ஒவ்வொரு சீசனிலும் வலம் வரும் போட்டியாளர்களுடன் இணைந்து செய்யும் சேட்டைகள் ஏராளம் எனலாம்.


மேலும் இந்த நிகழ்ச்சியில் நடுவர்களாக செஃப் வெங்கடேஷ் பட்டும் செஃப் தாமுவும் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் செஃப் வெங்கடேஷ் அண்மையில் மணிமேகலை மற்றும் அவருடைய கணவன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் பங்குபற்றி இருந்தார்கள்.

அப்போது தங்களது திருமணம் குறித்த சில விடயங்களைக் கூறியிருந்தார்கள்.அதாவது தன்னை மாப்பிள்ளை பார்த்த போது மனைவி முதலில் வேண்டாம் என்று கூறிவிட்டாராம். ஏனென்றால் இவர் பார்க்க உருளைக்கிழங்கு மாதிரி இருக்கிறார் என்று வேணாம் என்று விட்டாராம்.


ஆனால் பின்பு அவரின் மனைவியினது அக்கா தானாம் ஒரு மாதிரி பேசி தங்களுடைய திருமணத்தை நடத்தி வைத்தாராம் என்றும் கூறியுள்ளார். இந்த நிகழ்வில் இவருடைய மகளும் பங்குபற்றி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement