• Jul 23 2025

உன் சிறு அணைப்பில் ஓராயிரம் ஆறுதல் உணர்கிறேன்- கண்மணிக்கு பிரமாண்டமாக நடந்த வளைகாப்பு

stella / 2 years ago

Advertisement

Listen News!


 சமீப காலமாக சீரியல் நடிகர்கள், செய்தி வாசிப்பாளர்கள், தொகுப்பாளர்கள்,  மற்றும் சமூக வலைத்தளம் மூலம் பிரபலமானவர்கள் அனைவருமே வெள்ளித்திரை நடிகர்களுக்கு நிகராக தான் பார்க்க படுகிறார்கள்.இப்படி பிரபலமான பலருக்கு தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. 


அந்த வகையில், பிரபல தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருக்கும் கண்மணி சேகருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இவர் கடந்த ஆண்டு,' இதயத்தை திருடாதே' சீரியல் புகழ் நவீனை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து செய்தி வாசிப்பாளராக இருக்கும் கண்மணி,அண்மையில் தான் கர்ப்பமாக இருப்பதாகவும் அறிவித்திருந்தார்.


இதை தொடர்து ரசிகர்கள் பலர் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வந்த நிலையில், தற்போது இவருக்கு மிகவும் பிரமாண்டமாக வளைகாப்பு நிகழ்ச்சி நடந்துள்ளது.பட்டு புடவையில், அழகிய படைகளுடன், கணவருடன் எடுத்து கொண்ட சில புகைப்படங்களை இவர் வெளியிட அந்த புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருவதோடு ரசிகர்களின் வாழ்த்துக்களையும் குவித்து வருகிறது.


இந்த புகைப்படங்களுடன்... தன்னுடைய காதலை வெளிப்படுத்தும் விதமாக 'உன் சிறு அணைப்பில் ஓராயிரம் ஆறுதல் உணர்கிறேன்' கதையோடு தன்னுடைய காதல் கணவரை பற்றி கூறியுள்ளார் கண்மணி என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement