• Jul 25 2025

ஐஸ்வர்யா ராயைப் பார்த்தாலே பொறாமையா இருக்கு- திடீரென நடிகை மீனா போட்ட டுவிட்- ஓ இது தான் விஷயமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

மணிரத்னத்தின் பல நாள் கனவான பொன்னியின் செல்வன் திரைப்படம் உருவாகிவிட்டது. இரண்டு பாகத்திற்கான படப்பிடிப்பும் முடிந்துவிட்ட நிலையில் நாளை செப்டம்பர் 30 முதல் பாகம் வெளியாக இருக்கிறது.

இதில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா என நிறைய நடிகர்கள் நடித்துள்ளார்கள், புரமோஷனுக்காக படக்குழு பல மாநிலம் சென்றுவிட்டு இப்போது சென்னை திரும்பிவிட்டார்கள்.இப்படம் நாளைய தினம் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.


இப்படம் வெளியாகிய முதல் நாளிலேயே 25 கோடிக்கு அதிகமாக வசூல் சாதனை செய்யும் என்று நம்பப்படுகின்றது. இந்த படத்தின் எடிட்டிங்கை ஸ்ரீகர் பிரசாத் கவனித்து வருகிறார்,  கலை இயக்குனராக தோட்டா தரணி பணிபுரிந்துள்ளார்.

இந்த நிலையில் இப்படம் வெளியாகவுள்ள நடிகை மீனா ஒரு டுவிட் ஒன்று போட்டுள்ளார். அதில் சரி, என்னால் இனி அதை மூடி வைக்க முடியாது. அது என்னை திணறடிக்கிறது.என் வாழ்க்கையில் முதல்முறையாக நான் ஒருவரைப் பார்த்து பொறாமைப்படுகிறேன் அவர் ஐஸ்வர்யா ராய் என்றும் தெரிவித்துள்ளார்.


மேலம் மீனா கணவன் இறந்ததன் பின்னர் தனது தோழிகளுடன் அதிக நேரத்தை செலவழித்து வருகின்றார் என்பதும் முக்கியமாகும்.

Advertisement

Advertisement