• Jul 26 2025

சீதாவாக நடிப்பதற்காகவே மாமிசத்தை தவிர்த்து விட்டேன்- ஆதி புருஷ் பட நடிகை கூறிய சுவாரஸியமான தகவல்

stella / 2 years ago

Advertisement

Listen News!

பாகுபலி படம் புகழ் பிரபாஸ் நடிப்பில் வெளியான சாஹோ,ராதே ஷ்யாம் படங்கள் தோல்வி அடைந்ததால், அடுத்த ஒரு வெற்றிப்படத்தை கொடுத்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் பிரபாஸ். தற்போது இவர் இயக்குர் ஓம் ராவத் இயக்கத்தில் உருவாகி உள்ள ஆதிபுருஷ் படத்தில் ராமராக நடித்துள்ளார்.

ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பான் இந்தியத் திரைப்படமாக இப்படம் உருவாகி உள்ளது. இப்படத்தில் பிரபாஸ் ராமராகவும், க்ரீத்தி சனோன் சீதை கதாபாத்திரத்திலும், சையிப் அலிகான் ராவணன் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். டீசர் கடந்த ஆண்டு வெளியான நிலையில், படத்தின் கிராபிக்ஸ் கார்ட்டூன் போல இருக்கிறது என ரசிகக்ள் கண்டபடி விமர்சித்தனர்.


இதையடுத்து, கிராபிக்ஸில் சில மாற்றங்களை செய்ய படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளிவைக்கப்பட்டு, பின் ஜூன் 16ந் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. தற்போது ஆதிபுருஷ் திரைப்படத்தில் இருந்து இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது.

ஆதி புருஷ் திரைப்படம் அடுத்த மாதம் வெளியாக உள்ள நிலையில், சீதா கதாபாத்திரத்தில் நடித்துள்ள கிருத்தி சனோன் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், ஆலியா பட், தீபிகா படுகோனிக்கு பிறகு தான் இந்த படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. ஒவ்வொரு நடிகையின் கனவும் இதுபோன்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாகத்தான் இருக்கும். அந்த கனவு என் வாழ்க்கையில் தற்போது நிறைவேறி உள்ளது.

சீதா கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பதற்காக படப்பிடிப்பு நடைபெற்ற அனைத்து நாட்களிலும் அசைவைத்தை தவிர்த்துவிட்டேன். சீதாவாக வாழவேண்டும் என்பதற்காக பல புத்தகங்களையும், படங்களையும் பார்த்தேன் என்று கிருத்தி சனோன் இந்த பேட்டியில் கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement