• Jul 26 2025

அந்த மாதிரி படங்களில் நடிக்க அழைப்பு வந்தது - நடிகை ராதிகா ஆப்தே ஓபன் டாக்

Jo / 2 years ago

Advertisement

Listen News!

நடிகை ராதிகா ஆப்தே எந்த மாதிரி கதாபாத்திரங்கள் கொடுத்தாலும் அதனை அருமையாக நடித்துக்கொடுக்க கூடியவர். ஆனாலும் அவருக்கு தமிழில் பெரிதாக பட வாய்ப்புகள் இல்லை இதனால் ராதிகா ஆப்தே சற்று சோகத்தில் இருக்கிறார்.

இதனையடுத்து இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் இவர் தனக்கு அடல்ட் படங்களில் நடிக்க அதிக வாய்ப்புகள் வந்தாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய ராதிகா ஆப்தே ” நான் நடித்த ‘பத்லாபூர்’ படத்துக் குப் பிறகு எனக்கு அடல்ட் காமெடி படங்களில் நடிக்க நிறைய அழைப்பு வந்தது. கடந்த காலத்தில் உருவாக்கப்பட்ட சில படங்கள் பெண்களை இழிவுபடுத்தும் விதமாகவும், பெண்களை மரியாதையின்றி நடத்தும் விதமாகவும் இருந்தது.

இது போன்ற படங்கள் பெண்களை ஒரு போதப்பொருளாக காட்சிப்படுத்துகின்றன. எனவே, இதுபோன்ற படங்களில் நடிக்க எனக்கு விருப்பம் இல்லை. பெண்களை இழிவுபடுத் தும் நகைச்சுவைகளை சிலர் தங்களை அறியாமலேயே பயன்படுத்தி வருகின்றனர்.

இதுபோன்ற நகைச்சுவையை மக்கள் கொண்டாட ஆரம்பித்தால் பேராபத்தில் முடிந்துவிடும்’ என்று கூறியுள்ளார். 


Advertisement

Advertisement