• Jul 25 2025

காலேஜுக்குப் போனதாலதான் எனக்கு அவ கிடைச்சிருக்கா... 'தமிழும் சரஸ்வதியும்' கார்த்திக் பகிர்ந்த சுவாரஷ்யம்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் குடும்பங்கள் கொண்டாடும் ஒரு தொடராக ஒளிபரப்பாகி வருகிறது 'தமிழும் சரஸ்வதியும்' சீரியல். இந்தத் தொடரில் கார்த்திக் கதாபாத்திரம் மூலம் பார்வையாளர்கள் மனதில் இடம் பிடித்திருப்பவர் நவீன் வெற்றி. 


இந்நிலையில் சமீபத்தில் இடம்பெற்ற பேட்டி ஒன்றில் நவீன் வெற்றியும் அவரது மனைவியும் பல விடயங்களை பகிர்ந்துள்ளனர். அந்தவகையில் தனது மனைவி சௌம்யா பற்றி அவர் கூறுகையில் "பத்து வருஷமா காதலிச்சு ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்கிட்டு திருமணம் செய்துக்கிட்டோம். எனக்கு விஸ்காம் படிக்கணும்னுதான் ரொம்ப ஆசை. ஆனால் சூழ்நிலை இன்ஜினீயரிங் படிக்கிற மாதிரி ஆகிடுச்சு. 


அதன் பின்னர் வேண்டா வெறுப்பாதான் காலேஜுக்குப் போனேன். அங்கதான் நான் செளம்யாவைப் பார்த்தேன். அதன்பிறகு அந்த காலேஜ் எனக்குப் பிடிக்க ஆரம்பிச்சது. அந்தக் காலேஜுக்குப் போனதாலதான் எனக்கு செளம்யா கிடைச்சிருக்காங்க. செளம்யா பிடிச்சதனால இன்ஜினீயரிங்கும் பிடிச்சது" என்று கூறிப் புன்னகைத்தார். 

மேலும் அவரிடம் "காலேஜ் டைம்ல பண்ணின விஷயம் பின்னாளில் உங்களுக்கே ரொம்ப கிரின்ச்சாக தோணியிருக்கா’' என்று கேட்க இருவரும் சிரித்துக்கொண்டனர்.


தொடர்ந்து அவரின் மனைவி பேசுகையில் "ரெண்டு பேருமே ஒருத்தர் மேல ஒருத்தர் ரொம்ப பொசசிவ் ஆக இருப்போம். இப்ப வரைக்கும் சீரியலில் அவர் சண்டை போடுற சீன் வந்தா ரொம்ப ஜாலியா ரசிச்சுப் பார்ப்பேன். ரொமான்ஸ் சீன் இருந்தா அதைப் பார்க்கவே மாட்டேன்" என கூறியுள்ளார் சௌம்யா.

Advertisement

Advertisement