• Jul 25 2025

எனக்கு இன்னொரு பெயர் இருக்கு ரஜினி ஸ்டைலில் பிரபலங்களை கேள்வி கேட்ட ஆர்யா- கார்த்தி என்ன சொன்னார் தெரியுமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகர்களில் ஒருவராக கருதப்படுபவர் தான் ஆர்யா இவர் நடிப்பில் வெளியான கேப்டன் சார்பாட்டா பரம்பரை ரெடி ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்திருந்தது. இதனால் இவருடைய படங்களுக்கான எதிர்பார்ப்பானது ரசிகர்களிடையே அதிகமாகவே உள்ளது.

அந்த வகையில் இவர் முத்தையா இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.இந்த படத்தில் சிதி இத்னானி கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.சிதி இத்னானி  சிம்பு நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர்.


முத்தையா இயக்கும் படங்கள் அனைத்திலும், கிராமம் சார்ந்த கதைக் களம் தான் இடம்பெற்றிருக்கும். 'அவன் இவன்' உள்ளிட்ட ஒருசில கிராமத்து பின்னணி கொண்ட படங்களில் நடித்திருக்கும் ஆர்யா, தற்போது முத்தையாவுடன் கைகோர்த்திருப்பதால் ரசிகர்களிடையே ஆவல் அதிகரித்திருக்கிறது.

இந்நிலையில் நடிகர் ஆர்யா, தனது டுவிட்டர் பக்கத்தில், "ஆர்யா என்ற ஜம்ஷெத். எனக்கு இன்னொரு பெயர் இருக்கு. உங்க இன்னொரு பெயர் என்ன பாஸ்?" என ட்வீட் செய்து, நடிகர்கள் விஷால், கார்த்தி, மாதவன், ஜீவா, சந்தானம், விஷ்ணு விஷால், கலையரசன், வெங்கட் பிரபு, இயக்குனர் பா. ரஞ்சித், அருண் விஜய், ஜி.வி. பிரகாஷ் குமார், சிவா, யோகி பாபு, பரத், ஷாம் ஆகியோரை டேக் செய்துள்ளார்.


இதற்கு வெங்கட் பிரபு, சந்தானம், கார்த்தி, விஷ்ணு விஷால் ஆகியோர் பதில் அளித்துள்ளனர். குறிப்பாக நடிகர் கார்த்தி ஜப்பான் என்று பதில் அளித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement