• Jul 24 2025

"எனக்கு வைரமும் முத்துவும் பிறந்திருக்காம்.. இனி வைரமுத்து போல் இல்லை என்பாங்க"... குழந்தை குறித்து சின்மயி கொடுத்த பதிலடி...!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் அந்தக் காலத்தில் இருந்து இந்தக் காலம் வரை பெயர் சொல்லும் அளவிற்கு நிறைய பாடகர்கள் வந்துவிட்டார்கள். சிலரது குரலை மக்களால் என்றுமே மறக்கவே முடியாது. அப்படிபட்ட பாடகர்களில் ஒருவர் தான் சின்மயி.


இவர் 2014-ஆம் ஆண்டு நடிகரும், இயக்குநருமான ராகுல் ரவீந்திரனை திருமணம் செய்து கொண்டார் இந்தத் தம்பதியினருக்கு திருமணமாகி எட்டு வருடங்கள் ஆனதையடுத்து சமீபத்தில் இரட்டை குழந்தை பிறந்தது. ஆண் மற்றும் பெண் குழந்தைகளான இவர்களுக்கு த்ரிப்தா, ஷர்வாஸ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக அறிவித்தனர்.

சின்மயி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கவிஞர் வைரமுத்து தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பரபரப்பு புகார் ஒன்றை கூறியிருந்தமையைத் தொடர்ந்து, இன்றுவரை இது குறித்து கடும் விமர்சனங்களையும் சந்தித்து வருகின்றார்.


அதுமட்டுமல்லாது சமீபத்தில் கூட வைரமுத்து மீது நடவடிக்கை எடுக்கக்கோரி முதல்வருக்கு ட்விட்டர் வாயிலாக கடிதம் ஒன்றை எழுதி இருந்தார். இவ்வாறாக வைரமுத்து மீது கடும் கோபத்தில் இருக்கும் சின்மயி சமூக வலைத்தளங்களின் வாயிலாக ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து வருகின்றார்.

இந்நிலையில் நெட்டிசன் ஒருவர், உங்கள் குழந்தைகளின் புகைப்படங்களை பதிவிடுமாறு கூறியிருந்தார். இதற்கு சின்மயி "தற்போது முடியாது, எனக்கே நிறைய வெறுப்பு வருகிறது. என் குழந்தைகளுக்கும் அது வரவேண்டாம் என விரும்புகிறேன். இப்போதே வைரமுத்துவின் ரசிகர்கள் வைரமும் முத்துவும் பிறந்திருக்கிறார்கள் என கமெண்ட் செய்கிறார்கள். இந்த சமயத்தில் என் குழந்தையை காட்டினால் வைரமுத்து போல இல்லைனு சொல்லுவானுங்க தமிழ் கலாச்சார நண்பர்கள்" என பதிலளித்துள்ளார்.


இவரின் இந்த பதிவினை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

Advertisement

Advertisement