• Jul 25 2025

இந்த நடிகையோடு நடிக்கத் தான் இவ்வளவு நாளாக வெயிட் பண்ணிட்டு இருந்தேன்- உற்சாகமாக பேசிய சிவகார்த்திகேயன்!

stella / 2 years ago

Advertisement

Listen News!

 மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் படத்தில் நடித்து முடித்துள்ளார் சிவகார்த்திகேயன். இதன் சூட்டிங் கடந்த சில தினங்களுக்கு முன்பு நிறைவடைந்துள்ளது. தொடர்ந்து படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

இந்நிலையில் ராஜ்கமல் இன்டர்நேஷனல் தயாரிப்பில் தன்னுடைய SK21 படத்தின் சூட்டிங்கில் விரைவில் இணையவுள்ளார் . ராஜ்குமார் பெரியசாமி இயக்கவுள்ள இந்தப் படம் குறித்த அறிவிப்பு பல மாதங்களுக்கு முன்னதாகவே அறிவிக்கப்பட்டது. படத்தில் சிவகார்த்திகேயனுடன் சாய் பல்லவி ஜோடியாக நடிக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.


 இந்நிலையில் மாவீரன் படத்தின் சூட்டிங்கை முடித்துள்ள சிவகார்த்திகேயன், கமல் தயாரிப்பில் விரைவில் இணையவுள்ளார்.இந்நிலையில் SK21 தனக்கு மிக மிக ஸ்பெஷலான படமாக அமையும் என்று சிவகார்த்திகேயன் உற்சாகம் தெரிவித்துள்ளார். 


மேலும் இந்தப் படத்தில் தனக்கு ஜோடியாக இணைந்துள்ள சாய் பல்லவி, மிகச்சிறந்த நடிகை என்றும் அவருடன் இணைந்து நடிக்க தான் மிகுந்த ஆர்வமுடன் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். விஜய்யை தொடர்ந்து கோலிவுட்டில் சிறந்த டான்சராக அறியப்படும் சிவகார்த்திகேயனுக்கு இந்தப் படத்தில் டான்சே இல்லை என்று கூறப்படுகிறது.


Advertisement

Advertisement