• Jul 24 2025

என் வாழ்வில் நிறைய இழப்புக்களை சந்தித்துவிட்டேன்.! நான் இப்போது வலிகளுடன் வாழ பழகிக்கொண்டேன்! நடிகர் விஜய் ஆண்டனி.

sarmiya / 1 year ago

Advertisement

Listen News!

இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி ‘ரத்தம்’ படத்தில் நடித்து முடித்து. இப்படம் அக்டோபர்.6 ஆம் தேதி வெளியாக இருக்கின்றது. 


இந்நிலையில் வீஜய் ஆண்டனியின் மகள் மீரா அண்மையில் தூக்கிட்டு தற்கொலை  செய்து கொண்ட நிலையில் தானும் மகளுடன் சேர்ந்து இறந்துவிட்டேன் என விஜய் ஆண்டனி தெரிவித்திருந்தார்.


இந்நிலையில் ரத்தம் பட பத்திரிகையாளர் சந்திப்பு இடம்பெற்றிருந்தது. அதிலிருந்து  நேர்காணல் வீடியோக்கள் வெளியாகியிருந்தது. அதில் விஜய் ஆண்டனி பின்வருமாறு கூறியுள்ளார்.


வாழ்க்கையில் அடுத்தடுத்து என்ன நடக்கும் என்று தெரியாது. என் வாழ்வில் நிறையஇழப்புக்களை சந்தித்துவிட்டேன். இப்போது வலிகளுடன் வாழ பழகிக் கொண்டேன். நான் பெரிய தத்துவ வாதியில்லை. ஆனால் இழப்புக்களின் மூலம் நிறைய கற்றுக்கொண்டேன். என கூயிருக்கின்றார். 

Advertisement

Advertisement