• Jul 24 2025

இதுவரை நான் பொய் பேசியதில்லை- பயில்வான் ரங்கநாதனின் பேச்சால் வாய்விட்டுச் சிரித்த ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் குணச்சித்திரம் மற்றும் காமெடி வேடங்களில் நடித்து வருபவர் தான் பயில்வான் ரங்கநாதன்.இவர் தற்பொழுது பிரபல பத்திரிகை ஒன்றின் பத்திரிகை ஆசிரியராகவும் இருந்து வருகின்றார்.

இந்த நிலையில் 'ப்ளுசட்டை' என்ற குறும்படக் குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்வு சென்னையில் இடம் பெற்றது.அந்த நிகழ்விற்கு பணி்வான் ரங்கநாதனும் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

மேலும் இந்த நிகழ்வில் பேசுகையில், “பாலசந்தரின் அரங்கேற்றம் படத்திலிருந்து நான் சினிமா விமர்சனம் செய்கிறேன். காலையில் நான்கு மணிக்கு காசு கொடுத்து படம் பார்த்த பிறகுதான் விமர்சனம் எழுதுவேன். 1967ஆம் ஆண்டில் போலீஸுக்கு செலக்ட்டாகி 7 வருடங்கள் எஸ்.ஐ.யாக வேலை பார்த்தேன். புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் செக்யூரிட்டி ஆபிஸராகவும் இருந்திருக்கிறேன். 


என்.டி.ராமாராவ், சோபன் பாபுவுடன் சினிமாவில் சண்டை போட்டிருக்கிறேன். இதுவரை நான் பொய் பேசியதில்லை. சினிமா சுத்தப்பட வேண்டும் என்பதற்காகத்தான் நான் பேசுகிறேன். நான் சினிமாக்காரன் என்பதால் எனக்கு பெண் கொடுக்க மறுத்தார்கள். அந்த வேதனையில் தான் சினிமா நல்லா இருக்க வேண்டும் என்று பேசுகிறேன்.

இந்த விழாவிற்கு வந்துள்ள பல பெண்கள் என்னுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள். நான் தவறாக பேசுகிறேன் என்றால் என்னுடன் அவர்கள் எப்படி புகைப்படம் எடுப்பார்கள். சமீபத்தில் கமிஷனர் ஆபிஸிற்கு போயிருந்தேன். அங்கிருந்த போலீஸ் அதிகாரிகள், பின்றீங்க சார், விடாதீங்க, கிழிகிழினு கிழிங்க சார்னு சொன்னார்கள். நான் பொய் பேசினால் அந்தப் பாவம் என்னை வந்து சேரும். நான் பேசுவது உண்மை என்றால் அந்தப் பாவம் உங்களை வந்து சேரும்” எனக் கூறினார். இதனால் அங்கிருந்தவர்கள் வாய்விட்டுச் சிரித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement