• Jul 24 2025

இளையராஜா மாதிரியான மட்டமான மனிதரை பார்க்கவில்லை.திடீரென கொந்தளித்த இசையமைப்பாளர்..நடந்தது என்ன..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகின் இசைஞானியாக புகப்பட்டு வருபவர் இளையராஜா. ஆயிரக்கணக்கான பாடல்களை கொடுத்து பெரியளவில் புகழப்பட்டு வரும் இசைஞானியை பற்றி இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கேவலப்படுத்தி விமர்சித்திருப்பது  பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், ஒரு இசையமைப்பாளரான எனக்கு அவர் தான் குரு. அவரின் பாடல்களை கேட்டு இசையை கற்றுக்கொண்ட எனக்கு என்னுடைய அடையாளமும் அங்கீகாரமும் கிடைத்த வெற்றியும் எல்லாமே அவரிடம் இருந்து கற்றுக்கொண்ட இசைத்தான்.

 இளையராஜா என்ற தனிமனிதன் மேல் எனக்கு காட்டமான விமர்சனம் உள்ளது. அவரை மாதிரி மட்டமான மனிதரை நான் பார்க்கவே இல்லை என்றும் இசைஞானி என்ற பட்டம் கொடுக்கப்பட்டதற்கும், இசையமைப்பாளராக அவரது பாடல்களை பற்றி மணிக்கணக்கில் அவரை பற்றி பேசமுடியும்.

அத்தோடு ஒரு மனிதனா அவர் ரொம்ப மட்டமானவர். ஆன்மீகத்திற்குள் போகிறேன் என்று கூறிவிட்டு அசிங்கமாக பேச ஆரம்பிச்சிட்டாரு. அத்தனை பேரை காயப்படுத்தும் வண்ணம் ஏசு கிறிஸ்து வாழ்ந்தாரா, வந்தாரா, உயிர்த்தெழுதாரா என்று எனக்கு தெரியாது என்று கூறியுள்ளார் இளையராஜா.

அப்படி ஏசு கிருஸ்த்துவை கோடிக்கணக்கான பேர் நம்புகிறார்கள். அத்தனை பேர் நம்பிக்கையை காயப்படுத்தும் விதமாக அவர் அப்படி பேசலாமா.மேலும் இப்படி மற்றவர்களை கேவலப்படுத்துகிற ஒரு கேவலமான புத்தி இருக்கு அவருக்கு. அதனால் தான் அவரை மட்டமான மனிதர்-ன்னு நான் சொல்றேன் என்று ஜேம்ஸ் வசந்தன் காட்டமாக கூறியுள்ளார்.

Advertisement

Advertisement