• Jul 25 2025

எனக்கு மனரீதியாக சில பிரச்சினைகள் இருக்கிறது-புலம்பித் தவிக்கும் ஸ்ருதிஹாசன்..காப்பாற்றுவாரா? கமல்ஹாசன்

stella / 2 years ago

Advertisement

Listen News!


தென்னிந்திய சினிமாவில் வாரிசு நடிகையாக இருந்தாலும் தனது விடாமுயற்சியினால் முன்னணி நடிகையாக வளர்ந்து நிற்பவர் தான் ஸ்ருதிஹாசன்.கொஞ்ச நாளாக இருந்த இடம் தெரியாமல் இருந்த ஸ்ருதிஹாசன் நீண்ட இடைவேளைக்கு பிறகு ரீ என்ட்ரி ஆகியுள்ளார். இவரின் அடுத்த படமான வீர சீம ரெட்டி இன்னும் இரண்டு நாட்களில் திரையரங்குகளில் வெளிவர இருக்கிறது.

இந்தப்படத்தில் இவருடன் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா மற்றும் வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் இணைந்து நடித்திருக்கிறார்கள்.அந்த வகையில் சமீபத்தில் இப்படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

அந்த வகையில் ஸ்ருதிஹாசனிடம் சிரஞ்சீவியின் படப் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் ஏன் கலந்து கொள்ளவில்லை என்று கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த ஸ்ருதி, "எனக்கு உடல் நிலை சரியாக இல்லை. அதனால் தான் நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்ளவில்லை" என தனது சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார்.


தற்போது இவர் மேலும் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார், அதில் "எனக்கு மனரீதியாக சில பிரச்சினைகள் இருக்கிறது. வீட்டிலோ அல்லது படப்பிடிப்பு தளத்திலோ நான் நினைத்த படி நடக்க வில்லை என்றால் மனவுளைச்சலுக்கு ஆளாகி விடுவேன், அதிக மனவுளைச்சல் அடைந்தால் அதற்கு தகுந்த சிகிச்சை எடுத்து கொள்வேன்" என்று கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.   

Advertisement

Advertisement