• Jul 24 2025

அந்த Character பண்ணிட்டு 1 வருஷம் கஷ்டப்பட்டிருக்கிறேன்!- ஓபனாகவே பேசிய தனுஷ்

stella / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் தனுஷ் சினிமா பின்புலத்தோடு... தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருந்தாலும்,  தன்னுடைய திறமையால் ரசிகர்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்தவர். இவர் ஹீரோவாக அறிமுகமானபோது, மிகவும் கடுமையான விமர்சனங்களுக்கு ஆளானவர். 

இதனை பலமுறை, தனுஷின் தந்தை மிகவும் மனவேதனையோடு தெரிவித்துள்ளார். ஆனால் அன்று இவர், சந்தித்த அவமானங்களுக்கு தன்னுடைய வெற்றி மூலம் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறார்.தென்னிந்திய திரைப்படங்களை தாண்டி, பாலிவுட், மற்றும் ஹாலிவுட் படங்களிலும் நடிக்கும் அளவுக்கு வளர்ந்தார்.


சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியாகிய வாத்தி திரைப்படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படத்தில், தனுஷ் ஆசிரியர் வேடத்தில் நடித்திருந்தார். மாணவர்களுக்கு படிப்பு என்பது எந்த அளவுக்கு முக்கியம் என்கிற கருத்தை பதிவு செய்திருந்தது இந்த திரைப்படம்.


இந்த நிலையில் தனுஷ் அண்மையில் அளித்திருந்த பேட்டி ஒன்று வைரலாகி வருகின்றது.அதில் தனுஷ் கூறியதாவது மயக்கமென்ன மூன்று ஆகிய திரைப்படங்களில் நடித்த பின்பும் ஒரு வருஷமாக அந்த காரெக்டர்களில் இருந்து வெளி வராமல் தவித்தேன்.நான் கஷ்டப்பட்டது மட்டுமல்லாமல் கூட இருந்தவர்களையும் கஷ்டப்படுத்தியிருக்கிறேன். பின்பு தான் அந்த காரெக்டர்களில் இருந்து வெளியே வந்தேன் எனத் தெரிவித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement