• Jul 25 2025

21 நாட்களில் உடல் எடையைக் குறைக்க இதைத் தான் பண்ணினேன்- புதிய டிப்ஸ் கொடுத்த மணிமேகலை

stella / 2 years ago

Advertisement

Listen News!


சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளினியாக அறிமுகமாகியவர் தான் மணிமேகலை. இந்த நிகழ்ச்சி இவருக்கு நல்லதொரு அடையாளத்தைம் ஏற்படுத்திக் கொடுத்தது. தனது அக்காவுடன் சேர்ந்து பல நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியிருக்கிறார் என்பதும் முக்கியமாகும்.

தொடர்ந்து தன்னுடை ய பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் செய்த கொண்ட காரணத்தினால் சின்னத்திரையில் இருந்த விலகிய இவர் மிஸ்டர் அன்ட் மிஸ் இஸ்  சின்னத்திரை நிகழ்ச்சி மூலம் மீண்டும் என்ட்ரி கொடுத்தார்.


தொடர்நது விஜய் டிவி பக்கமே திரும்பிய இவர் விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தனியாக பங்குபெறுவதும், தனது கணவருடன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு கலக்குவதும் என இருந்தார்.

அவருக்கு குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி பெரிய பெயரை பெற்றுக் கொடுத்தது, ஆனால் இப்போது அவர் நிகழ்ச்சியில் இல்லை.தூக்கமின்மை, உணவு முறை, குறைவான உடற்பயிற்சி போன்ற காரணங்களால் 62 கிரோ வரை எடை கூடினாராம். வெயிட்டை குறைக்க ஆன்லைன் கோர்ஸ் ஒன்றை தேர்ந்தெடுத்து அவர்கள் கூறுவதை மட்டுமே செய்து வந்தாராம்.


பிடித்த எல்லா உணவுகளையும் வழக்கம் போல் எடுத்தாராம், ஆனால் பாதியளவு எடுத்தாராம். குறிப்பாக நார்ச்சத்து உணவுகளை அதிகம் சாப்பிட்டாராம். வீட்டில் வியர்வை கொட்ட எளிமையான பயிற்சிகளை தொடர்ந்து 21 நாட்கள் செய்தாராம்.குறிப்பாக தொப்பையை குறைக்க வெந்நீர், சரியான நேரத்திற்கு அளவான உணவு என எடுத்துக் கொண்டாராம். இதனால் தான் உடல் எடையைக் குறைத்துக் கொண்டாராம் என்றும் கூறப்படுகின்றது.


Advertisement

Advertisement