• Jul 26 2025

ஒரே கையெழுத்தால் வந்த வினை..கண்ணீர் வடிக்கும் நடிகை சுதா..நடந்தது என்ன..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

ஒரே கையெழுத்தில் பலநூறு கோடிகளை இழந்து கடனாளியாகிவிட்டேன் என நடிகை சுதா கூறியுள்ள விடயம் எல்லோரையும் கண்கலங்க வைத்துள்ளது.

தமிழில் குரு சிஷ்யன், வா அருகில் வா, டூயட், 7ஜி ரெயின்போ காலனி, வேதாளம் உள்ளிட்ட பல  திரைப்படங்களில் நடித்து பட்டை கிளப்பியவர் சுதா. இவர் தெலுங்கு, மலையாளம் போன்ற மொழி படங்கள் பலவற்றிலும் நடித்துள்ளார்.

மேலும் அவர் தனது வாழ்வில் சந்தித்த துயரமான அனுபவங்கள் குறித்து கண்ணீருடன் சமீபத்தில் பேசி இருந்தார். சுதா தெரிவிக்கையில், பணக்கார குடும்பத்தை சேர்ந்த நான் குழந்தை பருவத்தில் வசதியாக வளர்ந்தேன். ஆனால் விதி எங்களை பழிவாங்கிவிட்டது.


தந்தைக்கு புற்று நோய் இருப்பது பற்றித் தெரிந்த பின்னர் அனைத்து சொத்துகளும் விற்கபட்டன. நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போது என் அம்மா தாலியை விற்று எங்களுக்கு உணவளித்தார். சினிமாவில் நுழைந்த பின்னர் எனக்குப் பணமும் புகழும் கிடைத்தது.

நடிப்புக்கு பின்னரும் மீண்டும், நான் பல கடுமையான இழப்புகளை சந்திக்க வேண்டியிருந்தது.அவ்வாறுஇருக்கையில் டெல்லியில் ஒரு ஹொட்டலை திறந்தேன். அதில் இருந்த பணம் அனைத்தும் தொலைந்துவிட்டது. ஒரே கையெழுத்தில் பலநூறு கோடிகளை இழந்து கடனாளியாகிவிட்டேன்.

ஆனால் இப்போது அதிலிருந்து மீண்டும் வெளிவந்து கொண்டு இருக்கிறேன். அத்தோடு எனது ஒரே மகன் வெளிநாட்டு பெண்ணை திருமணம் செய்து கொண்டு அங்கேயே குடியேறி விட்டான். என்னிடம் தகராறு செய்து சென்றதோடு என்னுடன் பேசவில்லை.கணவரும் என்னை பிரிந்துவிட்டதால் தனிமையில் இருக்கிறேன் என வேதனையாக கூறிள்ளார்.

Advertisement

Advertisement