• Jul 26 2025

நான் உன்னை முழு மனதுடன் நேசிக்கிறேன் அம்மு- விவாகரத்து சர்ச்சைக்கு பதிலடி கொடுத்த ரவீந்தர்- வைரலாகும் போட்டோஸ்

stella / 2 years ago

Advertisement

Listen News!


'அன்பே வா' சீரியலில் முரட்டு வில்லியாக நடித்து வரும் சின்னத்திரை சீரியல் நடிகை மகாலட்சுமி, கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில், பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 

திருமணம் ஆனதில் இருந்து, தனி ஜெட்டில் ஹனி மூன், குலதெய்வ கோயில் வழிபாடு, ஃபாரின் ட்ரிப் என படு குஷியாக இருக்கும் இந்த ஜோடி, அவ்வபோது மிகவும் ரொமான்டிக் புகைப்படங்கள் சில வற்றையும் வெளியிட்டு, தங்களுடைய மகிழ்ச்சியான தருணங்களை ரசிகர்களுடன் ஷேர் செய்து வருகின்றனர்.


அந்த வகையில் அண்மையில் ரவீந்தர் தனியாக நின்று புகைப்படம் எடுத்து வெளியிட்டார். இதனைப் பார்த்த ரசிகர்கள் ரவீந்தர் மகாலட்சுமி இருவரும் பிரிந்து விட்டார்களா என்று கேள்வி எழுப்பி வந்தனர்.

இப்படியான நிலையில் இந்த கேள்விக்கெல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாக மகாலட்சுமியுடன் சேர்ந்து நிற்கும் புகைப்படத்தை எடுத்து வெளியிட்டுள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் தலைவர் மனைவியைப் பிரியவில்லை என்று கூறி வருகின்றனர்.


மேலும் அதற்கு கேப்ஷனாக அவர் நீ என்னைச் சுற்றி கைகளை வைக்கும் போது, ​​இந்த உலகில் என்னால் முடியாதது எதுவுமில்லை என்று எனக்கு தெரியப்படுத்துகிறாய்.. நான் உன்னை முழு மனதுடன் நேசிக்கிறேன் அம்மு என பதிவிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement