• Jul 26 2025

படத்தில் வில்லனாக இருக்கலாம் என் மகனுக்கு நான் தான் ஹீரோ- முதன் முறையாக மகனின் புகைப்படத்தை பதிவிட்ட ஜான் கொக்கன்

stella / 2 years ago

Advertisement

Listen News!

சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்த ஜான் கொக்கனை ரசிகர்கள் பலரும் வேம்புலி என்றே அழைத்து வருகின்றனர். அந்த அளவுக்கு அந்த கதாபாத்திரம் அவருக்கு பெரியளவுக்கு பெயரை பெற்றுத் தந்தது.

வேம்புலியாக நடித்த ஜான் கொக்கன் அஜித்தின் துணிவு படத்தில் வங்கியின் அதிபராகவும் நடித்து அஜித்துக்கே வில்லனாக மாறினார். கேப்டன் மில்லர் உள்ளிட்ட பல படங்களிலும் ஜான் கொக்கன் வில்லனாக நடித்து வருகிறார்.


எஸ்எஸ் மியூசிக் தொகுப்பாளினி பூஜா ராமசந்திரனை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னதாக 2வதாக திருமணம் செய்துக் கொண்டார் ஜான் கொக்கன். இந்த நட்சத்திர தம்பதியினருக்கு சமீபத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது.

 அந்த குழந்தைக்கு கியான் கொக்கன் எனப் பெயரிட்டுள்ளனர். இந்நிலையில், தனது மகனை தூக்கி வைத்துக் கொண்டு ஜான் கொக்கன் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் க்யூட் போட்டோ ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.நான் நடிக்கும் படங்களில் நான் வில்லனாக இருக்கலாம். 

ஆனால், என் மகனுக்கு நான் தான் ஹீரோ என ரொம்பவே உருக்கமான கேப்ஷனை பதிவிட்டு நடிகர் ஜான் கொக்கன் தனது மகனை தூக்கி வைத்துக் கொஞ்சும் போட்டோவை ஷேர் செய்து லைக்குகளை அள்ளி வருகிறார். கியான் ரொம்பவே க்யூட்டா இருக்கார் என ஜான் கொக்கனின் ரசிகர்கள் பலரும் கமெண்ட் போட்டு வருகின்றனர்.


Advertisement

Advertisement