• Jul 26 2025

நான் உன்னை ரொம்ப மிஸ் செய்கின்றேன்- ஆன்மா சாந்தி அடையட்டும்- நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் வீட்டில் ஏற்பட்ட திடீர் இழப்பு

stella / 2 years ago

Advertisement

Listen News!


தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் பிஸியான நடிகையாக வலம் வருபவர் தான் ராகுல் ப்ரீத்தி சிங்.இவர் தமிழில் கார்த்தியுடன் தேவ், தீரன் அதிகாரம் ஒன்று போன்ற படங்களிலும், சூர்யாவுடன் NGK படத்திலும் நடித்து ரசிகர்கள் மத்தியில் அறியப்பட்டவர்.


தற்பொழுது சிவகார்த்திகேயனுடன் இணைந்து அயலான் படத்திலும், ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன்-2 படத்திலும் நடித்து வருகிறார்.சில மாதங்களுக்கு முன் நடிகை ரகுல் ப்ரீத் சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காதலனுடன் இருக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டு இருந்தார்.


இவருடைய காதலான ஜக்கி பக்னானி த்ரிஷாவுடன் இணைந்து மோகினி படத்தில் நடித்திருந்தார்.இந்நிலையில், ராகுல் ப்ரீத்தி சிங் தான் வளர்த்து வந்த நாய் மரணமடைந்துவிட்டதாக தெரிவித்திருக்கிறார். அதனுடன் உருக்கமான பதிவு ஒன்றை எழுதி இருக்கும் அவர் தனது செல்ல நாயுடன் இருக்கும் புகைப்படங்களையும் பகிர்ந்திருக்கிறார். 


அந்த பதிவில்,"16 வருடங்களுக்கு முன் எங்கள் வாழ்வில் வந்து எங்களை மிகவும் அன்புடனும் மகிழ்ச்சியுடனும் மலரச் செய்தாய். நான் உன்னுடன் வளர்ந்தேன். நாங்கள் உன்னை மிகவும் மிஸ் செய்வோம்.நீ நன்றாக வாழ்ந்தாய். நீங்கள் கஷ்டப்படாமல் இருந்ததில் மகிழ்ச்சி. உன்னுடைய ஆன்மா சாந்தியடையட்டும் போஷி. எங்கிருந்தாலும் நீ மகிழ்ச்சியாக இரு" என குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் இந்த பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருவதைக் காணலாம்.




Advertisement

Advertisement