• Jul 24 2025

சார்ஜ்ர் பிளக் ஐ வைத்து விட்டு வயரை மட்டும் எடுத்திட்டு வந்தேன்... கூல் சுரேஷை உருக்கிய மனோபாலா மரணம்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் மனோபாலாவின் மரணத்திற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வந்த நிலையில் தற்போது நடிகர் கூல் சுரேஷ் மனோபாலா பற்றிக் கூறிய விடயமானது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது. 


அந்தவகையில் கூல் சுரேஷ் கூறுகையில் "அவர் கூட நடிக்கும் போது அந்தப் படத்திற்கு அவர் டரைக்டராக இருக்க மாட்டார். ஆனால் கூட இருக்கிற நடிகர்களுக்கும் அவரே டயலொக் கொடுத்து உதவி பண்ணுவார். 2மாசத்துக்கு முன்னாடி சந்தானத்தோட படம் அதில் நான், மனோபாலா எல்லோருமே நடிச்சிருந்தோம், அந்தப் படத்தில் நான் ஒரு சுவருக்கு பின்னாடி இருந்து வெளிய வரணும். நானும் வந்தேன், அதற்கு மனோபாலா அண்ணா சொன்னார் இப்படி டக்குன்னு வராதேடா மெதுவா வா, அப்போ தான் நல்லா இருக்கும் என்றார். இதுவே வேற நடிகர்களாக இருந்தால் நான் நடித்துப் பேர் வாங்கி விடுவேன் என்பதற்காக சொல்ல மாட்டார்கள், ஆனால் அவர் நான் எப்படி நடிக்கணும் என்று எல்லாம் சொல்லி கொடுத்திருக்கார். அது எல்லாமே எனக்கு இப்பவும் ஞாபகம் இருக்கு" என்றார்.


மேலும் "மனோபாலா அண்ணா உங்களை வாழ்த்த வயதில்லை வாங்குகிறேன், ஐதராபாத்தில் கூட நானும் நீங்களும் ஒரே ரூமில் இருக்கும் போது நீங்க விமானத்தில் போனீங்க, நான் ரயிலில் போனேன், அந்த சமயத்தில் உங்க போன் சார்ஜர் எடுத்து வர சொன்னீங்க, நான் சார்ஜர் வயரை மட்டும் எடுத்திட்டு பிளக்கை கூட எடுத்து வரல, அதுவும் எனக்கு இன்னமும் நினைவு இருக்கு, திரையுலகில் உங்க இடத்தை இனி யாருமே பூர்த்தி செய்ய முடியாது" எனவும் கலங்கியவாறு கூறியுள்ளார் கூல் சுரேஷ்.

Advertisement

Advertisement