• Jul 25 2025

“நானும் விலகுகிறேன்” - ராஜா ராணி 2 சீரியல் நடிகரின் திடீர் முடிவால் குழப்பத்தில் ரசிகர்கள்...

ammu / 2 years ago

Advertisement

Listen News!

பிரபலமான விஜய் டிவியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் தொடர்களில் ராஜா ராணி 2வும் ஒன்று. இதில் சந்தியா கேரெக்ட்டரில் ஆரம்பத்தில் ஆலியா மானஷா நடித்திருந்தார். பின்பு அவரின் பர்சனல் காரணத்தால் அவர் விலகினார். 


அதன் பின் ரியா அந்த கேரெக்ட்டரில் நடித்துக்கொண்டு இருந்தார். இதை ஏற்றுக்கொள்ளவே மக்களுக்கு நாள் எடுத்துவிட்டது. அவ்வாறு இருக்க இப்போது ரியாவும் இந்த தொடரிலிருந்து விலகி உள்ளார். தற்போது ஆஷா காவ்டா வந்துள்ளார்.


இவரின் வரவேற்பை மக்கள் ஏற்றுக்கொள்வார்களா? என்ற நிலையில் தற்போது அதே சீரியலில் நடிக்கும் சரவணன் என்னும் சித்து நானும் விலகப்போகிறேன் என்று கோவமாக பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.


ரியாவிற்கு  பெரிய வாய்ப்பு ஒன்று கிடைத்திருக்கலாம் அதனால் இந்த சீரியலை விட்டு விலகி இருக்குறார். இல்லையென்றால் இப்படி ஒரு வாய்ப்பை இழந்திருக்க மாட்டார் என்று கூறினார்.


மேலும் ஆரம்பத்தில் ஆலியா நடித்திருந்தார். அவருடன் சில காலம் நடித்தேன். அவர் விலகிய பின்னர் ரியாவுடன் இணைந்து நடிக எனக்கு கொஞ்சம் நாள் எடுத்துவிட்டது. பின்பு சரளமாக நடிப்பு வந்து விட்டது. இப்போது அவரும் விலகி விட்டார். இனி வரும் ஆஷாவுடன் இணைத்து நடிக்க கொஞ்சம் நாள் எடுக்கும். 


இந்த சீரியல் மக்கள் மத்தியில் பிரபலமாகிக் கொண்டிருக்கும் நேரத்தில் இப்படி நடப்பது எனக்கு வருத்தமாக உள்ளது. நானும் சீரியலை விட்டு விலகலாம் என்றே ஜோசிக்கிறேன் ஆனால் மக்களை ஏமாற்ற நான் விரும்பவில்லை என்று கூறி கோவமடைந்தார்.


Advertisement

Advertisement