• Jul 26 2025

கமல் பட ஷுட்டிங்கிற்கு ஓடியே தான் வந்தேன்- ராதிகாவை என்னால மறக்கவே முடியாது- ஓபனாக பேசிய விச்சு விஸ்வநாத்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் குணச்சித்திர மற்றும் வில்லன் வேடங்களிலும் நடித்து வுருபவர் தான் விச்சு விஸ்வநாத். இவர் பிரபல சேனலுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர் பேசிய விடயம் தற்பொழுது வைரலாகி வருகின்றது.

அதாவது குஷ்புவின் சகோதரன் என்று அழைக்கப்படும் இவர் சுந்தர்சியின் இயக்கில் உருவாகிய பல படங்களில் நடித்திருக்கின்றார். அதிலும் வின்னர் ,அருணாச்சலம் ,அன்பே சிவம் ,கலகலப்பு ,அரண்மனை என பல படங்களில் நடித்திருக்கின்றார். இந்த நிலையில் தான் நடித்த படங்களில் நடந்த சுவாரஸியமான விடயங்கள் பற்றி குறிப்பிட்டுள்ளார்.


அதாவது அன்பே சிவம் திரைப்படத்தில் என்னைநடிக்க அழைத்த போது நான் ஓடியே வந்திட்டேன். எப்போ இப்படியொரு சந்தர்ப்பம் கிடைக்கும் என்று காத்திட்டு இருந்தேன். அதே போல ரஜினி சேரின் அருணாச்சலம் படத்தில் நடிக்கும் போது ஒரு சீன்ல சௌந்தர்யா மேடத்திற்கு மாப்பிள்ளை மாதிரி நடிக்கணும். அந்த டைம் எனக்கு குஷியாக இரு்தாலும் கொஞ்சம் நடுக்கமாகவே இருந்தது.

அதே போல வின்னர் படத்தில் வடிவேலு சேர் பெல்டி அடிச்சுக் கொண்டு என்னோட இடுப்பில வந்திருக்கணும். அப்படி அவர் ஏறி இருக்கும் போது நான் கோபப்பட்டுட்டு முறைச்சிட்டே இருக்கணும்.ஆனால் எனக்கு அந்த சீன்ல சிரிப்பு அடக்கவே முடியல. அந்த சீன் மட்டும் நிறைய டேக் போனாங்க. வடிவேலு சேர் மாபெரும் நடிகர் என்றும் கூறினார்.


தொடர்ந்து பேசிய அவர் ராதிகா என்னுடைய நெருங்கிய தோழி என்னுடைய பல கஷ்டங்களில் என்னோடு கூட இருந்து எனக்கு சர்ப்போட் பண்ணியிருக்கிறார். அவரை என்னால எப்பவும் மறக்க முடியாது எனப் பல விடயங்களைக் கூறியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement