• Jul 24 2025

18 வயதிலேயே காதலிக்க ஆரம்பிச்சிட்டேன் ஆனால் அதுக்கு மட்டும் நோ சொல்லிட்டேன்- காதலருக்கு பிரியா பவானி ஷங்கர் போட்ட கண்டிசன்

stella / 2 years ago

Advertisement

Listen News!

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளராக இருந்து பின்னர் விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'கல்யாணம் முதல் காதல் வரை'என்ற சீரியல் மூலம் தன்னுடைய நடிப்பு கெரியரை ஆரம்பித்தவர் தான் பிரியா பவானி ஷங்கர். இந்த சீரியல் மூலம் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் உருவானது.

இதனை அடுத்து இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் வெளியான 'மேயாத மான்' என்னும் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார். இப்படத்தில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து மான்ஸ்டர், மாஃபியா, யானை, அகிலன், பத்து தல, ருத்ரன், கடைக்குட்டி சிங்கம், போன்ற இன்னும் பல படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.


இந்நிலையில் பிரியா பவானி ஷங்கர் 'மான்ஸ்டர்' படத்தை தொடர்ந்து, மீண்டும் எஸ் ஜே சூர்யாவுக்கு ஜோடியாக நடித்துள்ள 'பொம்மை' படம் விரைவில் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது தொகுப்பாளர் சிறிய வயதில் பொம்மை எல்லாம் வைத்து விளையாடிய ஞாபகம் இருக்கிறதா? என கேள்வி எழுப்பினார்.

இந்த கேள்விக்கு பதிலளித்த, பிரியா பவானி ஷங்கர் சின்ன வயதில் நான் பொம்மை எல்லாம் வைத்து விளையாடியது கிடையாது. மேலும் 18 வயதிலேயே நான் காதலிக்க துவங்கி விட்டேன். என் பாய் ஃப்ரெண்ட் கிட்டயும் டெடி பியர் மாதிரி ஏதாவது பொம்மை வாங்கிட்டு வந்து காச வேஸ்ட் பண்ணாத என்றும் அதேபோல் பூ ஏதாவது வாங்கிக் கொடுத்தால் அது நீ எடுத்து வருவதற்குள்  வாடி விடும் எனவே இந்த இரண்டு விஷயங்களை மட்டும் செய்யாதே என கூறுவேன்.


ஆனால் அதற்கு பதிலாக ஏதாவது சாப்பிட வாங்கி கொடுத்தால் மட்டும் போதும் என்பேன்... என்று கூறியுள்ளார். பிரியா பவானி ஷங்கரின் இந்த வித்யாசமான கடீஷனை கேள்வி பட்டு ரசிகர்கள் ஆச்சர்யப்பட்டு வருகிறார்கள். காதல் விஷயத்துல கூட நீங்க வித்தியாசம் தான்! கொடுத்து வச்சவர் அவர்!! என்று கூறி  வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது


Advertisement

Advertisement