• Jul 24 2025

அந்த படத்துக்கு எனக்கே இன்னும் டிக்கெட் கிடைக்கல.. வருந்தும் பார்த்திபன்!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

 பிவிஆர் உள்ளிட்ட அனைத்து மல்டிபிளக்ஸ் மட்டுமின்றி சாதாரண திரையரங்குகளிலும் பொன்னியின் செல்வன் படத்துக்கு வரும் ஞாயிற்றுக் கிழமை வரை ஹவுஸ்ஃபுல் புக்கிங் ஆகி வருகிறது.

சென்னையிலுள்ள ஐமேக்ஸ் திரையரங்கமான பலாஸோவில் ஆன்லைன் டிக்கெட்டை ஆஃப் செய்து விட்டு நேரடியாக வந்து வாங்க சொல்ல, அதற்கே பெரும் கூட்டம் நிற்கின்றது.

இயக்குநர் மணிரத்னமின் பொன்னியின் செல்வன் படத்தை பார்க்க ஒட்டுமொத்த திரை ரசிகர்களும் காத்திருக்கும் நிலையில், பார்த்திபனுக்கே டிக்கெட் கிடைக்கவில்லை என புலம்பி உள்ளார்.

பொன்னியின் செல்வன் படத்தின் புரமோஷனுக்காக இயக்குநர் மணிரத்னம், சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, சோபிதா துலி பாலா, சரத்குமார், ஏ.ஆர். ரஹ்மான் உள்ளிட்ட  பல பிரபலங்கள் கடந்த 2 வாரங்களாக சென்னை, ஹைதராபாத், மும்பை, டெல்லி என பல நகரங்களுக்கு சென்று புரமோஷன் செய்தனர்.

இவ்வாறுஇருக்கையில், நேற்று பிரத்யேகமாக நடிகர் சரத்குமார் பொன்னியின் செல்வன் படத்துக்காக ஒரு பிரஸ்மீட்டையே நடத்தி இருந்தார். இந்த படத்தில் பெரிய பழுவேட்டரையராக அவர் நடித்துள்ளார். அந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் என ரஜினியே சொல்லியும் மணிரத்னம் மறுத்திருந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ள சரத்குமார் தனது கதாபாத்திரம் பற்றியும், விஜய்யின் வாரிசு படத்தில் நடித்து வருவது பற்றியும் கூறியிருந்தார்.

அத்தோடு பெரிய பழுவேட்டரையர் பிரஸ் மீட் வைத்த நிலையில், தஞ்சைக்கு சாமி தரிசனத்துடன் படம் பார்க்க புறப்பட்ட சின்ன பழுவேட்டரையர் பார்த்திபன் இன்று மாலை 3 மணிக்கு ரசிகர்களுக்காக இன்ஸ்டாகிராமில் லைவ் வரப் போவதாக தற்போது ட்விட்டரில் அறிவித்துள்ளார்.மேலும்  வந்தியத்தேவனை திரையில் மிரட்டி விரட்டப் போகிறார் சின்ன பழுவேட்டரையர் பார்த்திபன் என்பது கூடுதல் தகவல்.

இயக்குநர் மணிரத்னம் படத்தில் நடித்த முக்கிய நடிகர்களே சிலர் ஸ்பெஷல் ஷோ கேட்டதற்கு முடியவே முடியாது. அனைவரும் தியேட்டருக்கு சென்று பாருங்கள் என சொல்லி விட்டதாக தகவல்கள் வெளியாகின. இவ்வாறுஇருக்கையில் படத்தில் நடித்த பார்த்திபனுக்கே டிக்கெட் கிடைக்கலையாப்பா என ரசிகர்கள் ஆச்சர்யத்தில் ஆழ்ந்துள்ளனர்.

சோழ மன்னனாக ஆயிரத்தில் ஒருவன் படத்தில் அசத்தலாக பார்த்திபன் நடித்திருப்பார். அதனை தொடர்ந்து தற்போது பொன்னியின் செல்வன் வரலாற்று படத்தில் சின்ன பழுவேட்டரையராக நடித்துள்ளார். மேலும்  இந்த படத்தின் டீசர் மற்றும் டிரைலரிலேயே மிரட்டி உள்ள பார்த்திபன் நாளை தியேட்டரில் சின்ன பழுவேட்டரையராக ரசிகர்களை மெய் சிலிர்க்க செய்வாரென எதிர்பார்க்கப்படுகின்றது. தஞ்சாவூரில் படத்தை ரசிகர்களுடன் பார்க்க சில தினங்களுக்கு முன்பே கிளம்பிவிட்டார் பார்த்திபன்.




Advertisement

Advertisement