• Jul 23 2025

சிறையில் இருக்கும்போது நான் நரக வேதனை அனுபவித்தேன்! செந்தில் பாலாஜி சாரும் கஷ்டத்தில் தான் இருக்கிறார்! ரவீந்தரின் புழல் சீக்ரெட்ஸ்.

sarmiya / 1 year ago

Advertisement

Listen News!

தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் பண மோசடி வழக்கில்  கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். கிட்டத்தட்ட ஒரு மாதம் சிறை தண்டனை அனுபவித்த அவர், கடந்த வாரம் ஜாமீனில் வெளியே வந்தார். சிறையில் இருந்து வெளியே வந்ததும் அங்கு தான் அனுபவித்துள்ள  கஷ்டங்கள் குறித்து பேசியுள்ளார். 


சிறையில் இருக்கும்போது நான் நரக வேதனை அனுபவித்தேன். பாத்ரூம் போவதற்கு ரொம்ப கஷ்டமா இருந்தது.  உட்கார்ந்தா எழுந்திருக்க முடியாது. அதுக்கு 2, அல்லது 3 பேர் உதவி வேணும். ஒவ்வொரு முறையும் அடுத்தவங்களை தொந்தரவு பண்ணக்கூடாது என  நானே பழகிக்கொண்டேன். 



எல்லா பிரபலங்களுக்கு சிறையில் எல்லா வசதியும் கிடைக்கும் என  சொல்றது தவறானது. செந்தில் பாலாஜி சாருக்கு புஹாரில் இருந்து பிரியாணி வருது, அது வருது இது வருது என  வெளியில்  பேசிக்கிகொள்கின்றார்கள். ஆனால் உள்ள அவர் ரொம்ப எளிமையான வாழ்க்கை வாழ்கிறார். ரொம்ப கஷ்டப்பட்டுக் காெண்டு  தான் இருக்கின்றார். ஜெயில்ல மற்றவர்கள் என்ன சாப்பிடுகின்றார்களோ அதை தான் அவரும் சாப்பிடுகிறார். 

கடைசியா  டிடிஎப் வாசன் உள்ள வந்ததும் ஜெயிலே கதறுது. குருநாதா இங்கயுமா என,  கையில் கட்டுடன்  உள்ள வந்தான். அங்க தனி செல்லில் தான் வச்சிருந்தாங்க. அவர் வழக்கம் போல அங்கு இருக்கும் போலீசையும் வா செல்லம், போ செல்லம்னு சொல்லிட்டு இருக்கிறார் என சிறையில் நடந்த சம்பவங்கள் பற்றி ரவீந்தர் கூறினார்.

Advertisement

Advertisement